பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/490

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் திருப்புகழ் உரை 17 குளிர்ந்த சோலைகளால் நிறைந்து வளர்ந்தோங்கு கமுக மரங்கள் நிறைந்துள்ள மேற்கிலிருந்து வரும் காவிரி ஆற்றுக்கு வட பக்கத்துள்ள திருவேரகம் என்னும் தலத்தில் உறைபவனே! உமையம்மைக்கு ஒப்பற்ற குழந்தையே! யானை முகக் கணபதிக்குத் தம்பியே! திருமா லுக்கு மருமகனே! அசுரர்களுடைய சிரங்களை வெட்டி எறிந்த பெருமாளே! (பெரு வாழ்வு பற்ற அருள்வாயே) 201 இரவின் இருட்டுப் போன்றது என்று சொல்லப்படுகின்ற கூந்தலாலும், ராமபிரானது அம்பே இது ஆகும் என்று கூறத்தக்க கண்களாலும். இசைநிரம்பிய பேச்சுக்களாலும், (பாரம்) தாங்கமுடியாத கொங்கையாலும், ல்லை என்று சொல்லும்படியாய் (அவ்வளவு நுணுகிய) இடையாலும், இளைஞர்களுடைய நெஞ்சை அரம் அறுப்பதுபோல அறுத்து, காலை மாலை இரண்டு வேளைகளி லும் (அவர்கள் தம்மைப்) ே பாற்றி ழுமாறு (எதிரே) வந்து, நியாயத்துக்கு மேற்பட்ட வில்ையைக் கூறுகின்ற விலைமாதர்களுடைய ஆசை. (என்னைப்) பீடியாது, அடியேனுக்கும் கடவுளின் திருவடியைத் தேடும் தனிப் பொருளான ஞானத்தைத் தருவாயே; குராமரத்தின் நீழலில் (திருவிடைக்கழி என்னும் தலத்தில்) வீற்றிருக்கும் குமரனே! என்று நாள்தோறும் குலவி இன்புற்று ஒதுகின்ற அன்பர்களின் வாழ்வே! வீராவேசத்தாற் கொக்கரித்த சூரனுடைய பருத்த முடிகள் எல்லாம் தொளைபட்டு வளையுமாறு வேலை அன்று செலுத்தியவனே!