பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/492

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் திருப்புகழ் உரை 19 செத்தையானது மிகுந்தெரியும் தீயின் முன்பு இல்லாது (எரிந்து) போமாறு, அணுகமாட்டாது வினை ஒடிப்போம்படி அதைப், பொடிபடச் செய்யும். நன்மையே உட் தோயும் ஞானத் தவசீலர்கள் சேர்ந்துள்ள சுவாமி மலையில் வாழும் பெருமாளே! (ஞானந் தருவாயே) 202 எருமைக் கடாவின் மீது தனது வீரம் குன்றாமல் இனிதாக ஏறும் கடாப் போன்ற யமனார் - தூண்டி அனுப்பிய தூதன் தவறாத வழியில் வருவது போல வந்து, கனாவில் விளையாடுகின்ற கதை போலவும் ஒருவருக்கு ஈயாது பல தேடிச் சேகரிக்கும் கொடியோர்தம் பொருள் போலவும் இங்கு நிலைத்து இருக்க முடியாத வண்ணம் உயிரைக் கவர்ந்து போம் சுகந்தான் - இது (இவ் வாழ்க்கை) என்று உணர்ந்து, காலை மாலை இரு போதும், எப்போதும் இனிய மொழிகளால் இன்றுயானும் உன்னை ஒதும்படி கண் பார்த்தருளுவாயாக விட்டுக் கொடுக்காது நடனத்தை நாளும் காளியுடன் ஆடுகின்ற (நாடக) இலக்கணம் அறிந்த ஈசனார் அளித்த பெரு வாழ்வே (குழந்தையே)! துர்க்குணம் கொண்ட சூரனுடைய அலங்கார உயிரும் வாழ்வும் அழியும்படி வேலை அன்று செலுத்தியவனே! தொட முடியாமல் நீண்ட தூரம் தடை படாமல் அதிகமாக ஒடுகின்ற மூச்சையும், ஐம்புலன்களையும் நல்ல படி உள்ளே அடக்குகின்ற ஞானதவ சீலர்கள் சேர்கின்ற சுவாமிமலை வாழும் பெருமாளே! (சதா... உனை ஒதும்படி பாராய்)