பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/512

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 39 பிரதாபத்துடன் விளங்கி எழுந்து (பொம்மலாட்டத்தில்) மரப்பாவையைக் கட்டியுள்ள கயிறு போலப் பொருந்தி (ஆட்டங்களை) ஆடி, வானத்தில் வெளிப்பட்டு ஒளி வீசும் மின்னலின் உருவு போல ஒடி (ஈற்றில்) உடல் வெந்து போய் மறைகின்ற என்னையும் குறிக்கொண்டு கருதி, ஒப்பற்ற பரம்பொருள் இது என்று என் இருசெவியிலும் உபதேசித்து, இம் மனித உரு எடுத்து வந்துள்ள என் பிறப்பு வினையையும், அரிய மும்மலங்களையும், பொடிபடுத்தி, குளிர்ச்சியைத் தருவதும், சிறந்ததும், மேன்மை வாய்ந்ததுமான - கருணையைப் பொழிகின்ற தாமரை யன்ன உன் முகங்கள் ஆறும், கடப்ப மாலையும் கிரீடம் அணிந்துள்ள திருமுடிகளும், விளங்கும் சிலம்பணிந்த திருவடிகளும் விளங்கக் கல கல என்னும் ஒலியுடன் மயில் மீது ஏறி வந்து, மகிழ்ச்சியுடன் என்னை ஆண்டருள்வாயாக. திரிபுரங்களையும் மன்மதன் உடலையும் எரித்துச் சாம்பற் பொடியாக்கியவரும் மிக இளமை வாய்ந்த விடை வாகனத்தை உடையவரும், நடன ரா ஜரும், எவ்விடத் தும் விளங்கும் அருணகிரி சிவந்தமலை (நெருப்பு மலையின்) சொரூபம் கொண்டவரும், தோற்றமும் முடிவும், அந்த அருணகிரியில் திருமாலும் பிரமனும் அறிய முடியாத - சிவாய நம நமசிவாய என்னும் ஐந்தெழுத்தின் மூல காரணப் பொருளானவரும் கருணை சுரந்து (ஞான) அமுதத்தைத் தந்தருளி என்னை யாண்டவருமான எந்தை சிவபிரானது திரு உருவத்தில் (இடது பாகத்தில்) இருந்து மகிழும் என் தாய் (உமையம்மை) அருளிய புதல்வனே! கோழிக் கொடியுடன் மயில்மீது ஏறி மந்தர மலை முதலாகப் பூமியில் உள்ள (எல்லா) மலைகளும் சுழலவும்: மறை ஆயிரக்கணக்கானவைகளும் (எண்ணிலா வேதங்களும்) 'குமர குருவே" என்று ஒலிக்கவும்; வலிய ஆதிசேடன் அஞ்சவும் வருபவனே!