பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/540

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 67 விடத்தையே கொடுத்து மிக்க பொருளையே பறித்துதவுகின்ற விலை மாதர்களின் பொய்யான கலவி இன்பம் இனிய தாகுமோ! (ஆகாது என்றபடி), (கயிலை) மலையை எடுத்த ஒப்பற்ற வாளை ஏந்தின அரக்கன் (ராவணனுடைய) உடல் வடக்கே உள்ள மேருவே விழுந்ததென்னும்படி தரையில் விழும்படியாகத் - தக்க விதத்திற் செலுத்திய அம்பை உடையவனாகிய (ரீராமபிரான்) - திருமால் மகிழும் மருகனே! கடப்பமலர் அணிந்துள்ள மார்பனே! சில காவிய நூல்களின் உண்மைப் பொருள் வழிகளை அறிந்த அறிஞர்கள் ஒதின தமிழைச் செவி குளிர ஏற்றருளும் முருகனே! சிவபிரானுக்கு உரிய உபதேச மூலப்பொருளை (ஒம் என்னும் பிரணவப் பொருளை) அருளிய பெருமாளே! திருவேரகத்தில் (சுவாமிமலையில்) எழுந்தருளியிருக்கும் பெருமாளே! (விலைமாதர் பொய்க்கலவி இனிதாமோ) 225 பாதி மதியையும் (பிறைச் சந்திரனையும்), கங்கை ஆற்றையும், மலர்களையும் அணிந்துள்ள சடைப்பெருமான் (சிவபிரான்) அருளிய குமரேசனே! சர்க்கரை வெல்லத்தையும் கனியையும் போன்ற மொழிகளை உடைய மாது குறமகள் (வள்ளி)யின் பாதத்தை பிடித்துத் தடவும் மணவாளனே!