பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/551

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 முருகவேள் திருமுறை 14- ஆம் திருமுறை வாசக முரைத்துச் சூத்ர பாவையெ னுறுப்பைக் காட்டி வாசனை முலைக்கச் சாட்டி யழகாகச் சீர்கலை நெகிழ்த்துப் போர்த்து நூலிடை நெளித்துக்காட்டி தீதெய நடித்துப் பாட்டு குயில்போலச். சேருற அழைத்துப் பார்த்து சார்வுற மருத்திட் டாட்டி சீர்பொருள் பறிப்பொய்க் கூத்த ருறவாமோ, ஆரர்கள் பதைக்கத் தேர்க்க ளானைக ளழித்துத் தாக்கி ஆர்கிரி கொளுத்திக் கூற்று ரிடும்வேலா. துாமொழி நகைத்துக் கூற்றை மாளிட வுதைத்துக்

  • கோத்த தோலுடை யெனப்பர்க் கேற்றி * திரிவோனே ஏரணி சடைச்சிப் பாற்சொ லாரணி சிறக்கப் போற்று

1 மேரெழி னிறத்துக் கூர்த்த மகவோனே

  • மருத்திட்டு மருந்திடுதல் தமது வசப்படுத்துவதற்காக வேசையர் வாய் நீர் சிறு நீர்.. நாத நீர் ஆகிய மூன்று நீர் சம்பந்தப்பட்ட சொக்கு மருந்தைக் கரும்பின் சாற்றிற் கலந்து சோறிடும் போதோ படுக்கையிலோ ஆடவர்க்குத் தருதல். இதை முச்சலீலிகை என்பர். திருப்புகழ் 654-ன் குறிப்புரை பார்க்க 28, 88, 296, 580, 603, 886, 894, 963-பாடல்களைப் பார்க்க f கூற்றுார். இயம லோகம்
  1. கோத்த-உடுத்த-கோத்த கல்லாடையும் கோவணமும்" சம்பந்தர் -வலம்புரம்-III-103-2.

S என் அப்பர்க்கு எனப் பிரிக்க * திரிதல் போதல் tt முருகவேளின் நிற விசேடத்தை நிறத்திற் கந்தன்" என 77ஆம் பாடலிற் சிறப்பித்ததைக் காண்க. நிறம் புகழ்-(புகழொளி). முருகன் புகழ் மிக்கவன் என்பதை "பலர் புகழ் நன்மொழிப் புலவரேறே" என்னும் திருமுருகாற்றுப்படையிலும் தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே' என்னும் பரிபாடலிலும் (14) காணலாம். நிறம்-ஒளி "பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டா அங்கு ஒவற இமைக்கும் சேண் விளங் கவிரொளி (திருமுருகாற்றுப்படை)- "சதகோடி சூரியர்கள் உதயமென - ஒருசோதி வீசுவதும்" (சிர்பாத வகுப்பு).