பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 81 பனை ஒலை இதழைக் குழையாகக் கொண்டவள், மறைபட்ட பொன் போன்றவள், திருமாலின் மகள் சுந்திரவல்லி குறவர்மகள் ஆனமையால் (மண் மூடின பொன் போன். றவள்) ஆகிய வள்ளிக்கு ஏற்ற (பொருந்திய) பெருமாளே! திரு ஏரகமலையில் (சாமிமலையில்) விளங்கும் பெருமாளே! (பொருள்பறி பொய்க் கூத்தர் உறவாமே) 231 விஷமும் கூரிய வேலும் மன்மதனுடைய பாணங்களும், மாவடுவும் ஒப்பானவையாய், மகர மீன் போன்ற நீண்ட குழைகளுடன் கலந்து மீளும் கண்களையும், மென்மை வாய்ந்த புழுகு (புனுகு சட்டம்) கலந்த கஸ்தூரி, சந்தனம், மணமுள்ள செஞ்சாந்து இவை அணிந்துள்ள இளநீர் போன்றனவும் வடக்கே உள்ள சிறந்த மலையாம் மேரு போன்றனவும், அச்சந் தரத்தக்கனவும், பாரமுள்ளனவும், புளகம் பூண்டுள்ளனவுமான கொங்கைகளையும், மிக்க காமத்தை எழுப்பும் நடனம் செய்கின்ற பாதங்களில் அணிந்துள்ள சிலம்பையும், மேகமும் (இதன் கரு நிறத்துக்கு முன்பு எனது கரு நிறம் எந்த மூலை என்று) கெஞ்சும்படி கறுத்தும், மலர் செருகப்பட்டதுமான கூந்தற் பாரத்தையும், விளங்கும் தாமரை மலர் போன்று ஒளி நிலா வீசும் முகச் சோதியையும், அன்னப் பறவைக்கு நேரான நடை (அழகையும்), குளிர்ந்த அழகிய சந்திரனைத் தொழுகின்ற தேகம் முழுமையும் (அல்லது குளிர்ந்த அழகிய சந்திரன் இந்தத் தேகத்தின் அழகுக்கு முன்பு நமது அழகெங்கே என்று வணங்கத் தக்கதுமான) தேகம் முழுமையும் அழகு, ஒளியையும், அரி (சிலம்பின் உட்பரலின் பருக்கை மணிகளின்) ஒலியைத் தன்வசத்தே கொண்ட கிண்கிண் எனஒலிசெயும் சிரிப்பையும் கொண்ட மாதர்களுடைய சேர்க்கையை நினைந்து நான் (உள்ளம்) உருகுதல் ஆமா. உருகுதல் நன்றா! (உருகுதல் கூடாது என்றபடி)