பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/556

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 83 அழகுடைய மானும் (மாரீசன் என்னும் அரக்கனும்) பகைத்து வந்த கரன் என்னும் அரக்கனும், விளங்கின ஏழு வகையான மரா மரங்களும், ஒப்பு எதுவும் இல்லாத வலிய் பராக்ரமம் வாய்ந்த வாலி என்னும் குரங்கு வேந்தின் வலிமையும் (அல்லது மார்பும்), பெரிய கடல் ஏழும் - வீரம் வாய்ந்த அரக்கர் சேனை முழுதும், இலங்கை அரசன் இராவணனுடைய சிறப்புற்ற சூரிய்ன் போல స్ట్రో விடுவதாய் அணியப்பட்ட அலங்காரமான ரத்ன கிரீடம் விளங்கும் தலைகள் பத்தும், மேம்பட்டு விளங்கும் இருபது தோள்களும், (அவன்) - அடைந்திருந்த வலிமையும், (இவை யெலாம்) மாண்டு ஒடுங்க ஏவின போர் அம்பைக் கொண்ட தசரத ராஜ குமாரனும், ரகு வம்ச சிரேஷ்டனும், அருள் பாலிக்கும் மூர்த்தியுமான முராரியின் (முரன் என்னும் அசுரனுக்குப் பகையாய் அவனை اسمائے ழித்த தி ருமா லின்) மருகனே! விளங்குகின்ற மயிலில் ஏறி - ஒரு நிமிஷ நேரத்தில் பகைவர்கள் மாள உலகை வலமாக நொடிப்பொழுதில் வந்து, சிறந்த அழகிய சுவாமிமலையில் அமர்ந்தருளும் பெருமாளே! (மாதர் கலவியில் நைந்து உருகிடல் ஆமோ) 232 - விரிந்த செழுமை வாய்ந்த, கூந்தலில் விளங்குகின்ற மலர்களில் உள்ள வண்டுகள் "தன தனத்த னந்தன தனதன" என்னும் ஒலியை விரித்து எழுப்ப, வளமை வாய்ந்த மீன் போன்ற கண்கள் பொருந்தியுள்ள் (காதிலுள்ள) குழைகளோ டும் அலைபாய (பாய்ந்து அலைச்சலுற) S வாலி.இந்திரன் குமாரன். இவன் தம்பி சுக்கிரீவன் இராமரைத்துணை கொண்டு அவரால் இவனைக் கொல்வித்தான். $ கடல் மீது ராமர் அம்பை ஏவினது பாட்டு 177 கீழ்க் குறிப்பைப் LITTTT&F&F. 1 முரன்-நரகாசுரனுடைய சேநாபதியும் மந்திரியும்; கண்ண பிரானாற் கொல்லப்பட்டான். முரன்அரி (பகைவன்) முராரி, x உலகை வலம் வந்தது பாட்டு 184 கீழ்க்குறிப்பைப் பார்க்க