பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/561

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை "வழுதியர் தமிழி னொருபொரு ளதனை வழிபட மொழியு முருகேசா. மலரடி பணியு மடமகள் பசலை மயல்கொடு தளர்வ தழகோதான்; முழுகிய புனலி லினமணி தரள முறுகிடு பவள மிகவாரி. முறையொடு குறவர் மடமகள் சொரியு முதுமலை யழக குருநாதா, பழகிய வினைகள் பொடிபட அருளில் படிபவ ரிதய முறுகோவே. பருவரை துணிய வொருகணை $ தெரிவ பலமலை யுடைய பெருமாளே.(2) 青 வழுதியர் தமிழ் பாண்டியர்களால் விருத்தி செய்யப்பட்ட தமிழ். f ஒருபொரு ளதனை வழிபட மொழியும் முருகேசன்’ என்றது இறையனார் அகப்பொருளுக்குச் சங்கப்புலவர் பலரும் செய்துவந்த உரைகளை யெல்லாந் தனித்தனியே கேட்டு ஒவ்வோரிடங்களிற் சிரக்கம்பஞ் செய்து, நக்கீரர் செய்த உரையை முழுதும் வியந்து சிரக்கம்பஞ் செய்து ஸ்தாபித்தருளிய உருத்திரசன்மரை.(126 திருப்புகழ்-கீழ்க்குறிப்பைப் பார்க்க)

  1. பசலை காமநோயால் உண்டாகும் நிற வேறுபாடு

S முதுகிரியில் குறப்பெண்கள் மணியையும் தரளங்களையும் வாருதல்:-"மணித் தரளங்கள் வரத் திரண்டங் கெழிற் குறவர் சிறுமிமார்கள் முறங்களினாற் கொழித்து மணி செல விலக்கி முத்துலைப் பெய் முதுகுன்றமே" - சம்பந்தர் I-131-7 இது அருணகிரியார் சம்பந்தர் தேவாரத்தைப் படித்துள்ளார் என்பதற்குச் சான்று ஆகும். முதுகிரி-விருத்தாசலம். $ தெரிகை பலபல வுடைய பெருமாளே." என்றும் பாடம்