பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/562

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுதோறாடல்) திருப்புகழ் உரை 89 பாண்டியர்கள் போற்றி வளர்த்த தமிழில் ஒப்பற்ற (அகப்)பொருள் இலக்கணத்தைச், (சங்கப் புலவர்கள்) வழிபட (வணங்கி வேண்டி நிற்க) ஆய்ந்து உரைத்த (விளக்கிய) முருகேசனே! (உனது) மலரடியைப் பணியும் (இந்த) மடமகள் (மடப்பம்-அறியாமை கொண்ட மகள்) காமத்தால் உற்ற நிறவேறுபாட்டுடன் மோக மயக்கத்தால் தளர்வது (இளைத்துப் போவது) அழகோ (நியாயமோ)! முழுகிய நீரில் (நீரில் முழுகி) கூட்டமான மணிகளையும் முத்துக்களையும் கொடிபோற் பின்னிய பவளங்களையும் நிரம்ப வாரி - o (வாங்குங்கள் என்னும்) முறையீட்டோடு குறப்பெண்கள் சொரிகின்ற முதுகிரியில் (விருத்தாசலத்தில் உறைகின்ற) அழகனே! குருநாதனே! " (என்னுடன் ) கூடவே பழகி வருகின்ற வினைகள் (எல்லாம்) பொடிபடும்படி, (உனது) திருஅருளில் (மனம்) தோய்பவருடைய (அல்லது திரு அருளுக்குப் பாத்திரமானவர்களுடைய) உள்ளத்தில் வீற்றிருக்கும் தலைவனே! பருத்த (கிரெளஞ்ச) மலை துணிபடும்படி ஒப்பற்ற ஆயுதத்தை தெரிந்தெடுத்துச் செலுத்தினவனே! ᏞJ☾u) மலைகளுக்கும் அதிபனாயுள்ள பெருமாளே! (மயல் கொடு தளர்வது அழகோ தான்)