பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 131 250 (ஐந்தாவது பாணமாகிய) நீலோற்பல பாணத்தைச் செலுத்தத் தொட்டுள்ள மன்மதனது முடியின் மீது குடையாக அமைந்த குறையை உடைய திங்களின் (வெப்பத்துக்கும்), (அல்லது - பிறை நிலவாலும், பிறை நிலவு காயும் கொடுமைக்கும்), நெருங்கிவரும் பழிச்சொல் பேசுகின்ற மங்கையர்க்கும், இனிய குரலுடன் கூவும் குயிலுக்கும் இனி (இவள்) தளராதவாறு இவளை (உன் மீது காதல் கொண்ட இந்தப் பேதைப் பெண்ணை-நாயகியைத்) துவள்கின்ற அந்தச் சேர்க்கைக்கு விரும்பி (இறுக) அழுத்தமாகத் தழுவி உன் புயங்களின் மீதே. (உன் புயங்களின் மீது இறுக அணைத்து) ஒப்பு இல்லாத அழகுடன் இவள் அணிந்து கொள்ள (உனது) கருணைக்கு (அடையாளமாக) இனிமை தரும் (உனது) மாலையைத் தந்தருள வேண்டுகிறேன். கவளம் (உணவு உண்டை) உண்பனவும், மதம் பாயும் சுவடு கொண்டனவுமான யானைகள் எட்டும் (திக் கஜங்கள் எட்டும்) அலறிப் பயப்படப், பொன் மலையாம் கிரெளஞ் சத்துடன் சண்டை செய்த வேலனே! (வள்ளியைத் தழுவ) நினைத்து, அசோக மலர்க் கணையைக் கையிலுடைய மன்மத சேஷ்டையால் உருகி, (அந்த அம்மையுடன்) சேருதற்கு விரும்பி எழுகின்ற மார்பை யுடையவனே! (கலவிக்கண் நயத்து எழும் மார்பா) பவளம், முத்து இவை திரண்டுள்ள குவியல்கள் மலைபோலக் கிடக்கும் வயற் புறங்களின் மேல். சங்கின் கூட்டங்கள் நெருங்கும் திருத்தணிகைப் பதியில் (வீற்றிருக்கும்) குமரப் பெருமாளே! (தொடையைத் தரவேணும்)