பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/612

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . திருத்தணிகை திருப்புகழ் உரை 139 254 திண்ணிதாய் மிகப் பருமையுடைய அழகிய மூங்கில் போலும் தோள்களும், கொங்கையாம் மலைகளும் மேகத்தை ஒத்து நெருங்கும் கருநிறக் கூந்தலுங் கொண்ட மாதர்களுடைய கறுத்த மை பூசிய கயல் மீன் போன்ற கண்களில் (எனது) எண்ணங்களை வைத்து, ஒப்பற்ற உனது கழல் அணிந்த திருவடிகளைச் சேருதற்கு அறியாமல் தொகுதியான பிணிகளின் கூட்டத்திற்கு இருப்பிடம் என்று சொல்லும்படி இருந்து உலை ஊது கருவி போல (மேலும் மேலும் பெரு மூச்சுவிட்டு) ஒலி செய்து, கட்டுண்ணும் சுக்கிலம், ஊன், தோல் இவைகளால் எடுக்கப்பட்ட நிலையில்லாத உடம்பைச் சுமக்கின்ற இந்தப் பிறப்பை ஒழித்து எனக்கு அழியா முத்தியைத் தந்தருள வேணும். பனை (மரம்) போலும் துதிக்கையையும், கோபத்தையுங் கொண்ட வெள்ளை யானை ஐராவதத்தை உடைய தேவேந்திரனைத் துரத்தி ஒட்டிய சூரனை கடல் நீரில் பயப்பட்டு ஒடும்படி போர் செய்த வேலனே! 'மலைகளின் கர்வம் அடங்கி ஒழியும்படி மிதித்துழக்கும் முள் உள்ள கால்களைக் கொண்ட கோழிக் கொடி கொண்ட குமரேசனே! தினைப்புனத்தை Զ_Gմ)Լ-LLI (வள்ளி) மலையிற் குடிகொண்டிருந்த குறத்தி வள்ளியை மகிழ்ச்சியுடன் அழகிய புயங்களில் அணைந்தவனே! "பருப்பதச் செருக்கறத் துகைக்கும் குமரேசா முட்பதத்தினைப் படைத்த குக்குடக் கொடிக் குமரேசா எனவும் இயைக்கலாம். பருப்பதம் (கிரெளஞ்சகிரியின்) மமதையை ஒழித்த குமரேசா எனப் பொருள்படும்.