பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/614

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . திருத்தணிகை திருப்புகழ் உரை 141 அழகிய ஊரின் வெளிப்புறப் பகுதிகளில் புறத்தே (உள்ள வயல்களில்) லட்சுமீகரம் பொருந்தும், பரிசுத்தமான முத்துக்கள் விளங்கும் திருத்தணிப் பெருமாளே! புண்ணிய திசையாகிய வடக்கில் (தமிழ் எல்லையின் வடஎல்லையில் உள்ளதிருத்தணிப் பெருமாள்ே! (எனக்கு நித்த முத்தியைத் தரவேணும்) 255 பருமை உடைய பல்லொடு கூடிய தலையையும், நிறமும் ஒளியும் கொண்ட கைகளையும், தாங்குகின்ற அந்தக் கால்களையும், அன்புடனே. கொண்ட பொய்யான குடமாம் (உடலை), பழிக்கும் பாவத்துக்கும் இடமாம் (உடலை), பசிக்கு இருப்பிடமாய் குடலொடு கூடிய உடலை, பயத்தொடுங் கூடிய பெரிய பித்த உருவத்தை தோலாலாய உலை ஊது கருவியை (அல்லது பொய்யான மாயையான துருத்திப் பையை) பொருத்தப்பட்டுள்ள (காமம், வெகுளி மயக்கம் என்னும்) முக்குற்றங்களொடும், (சுவை, ஒளி, ஊறு ஒசை, நாற்றம் என்னும்) ஐம்புலன்களொடும் கட்டுப்பட்ட |ந்த நோய்ப் பையைத் தாங்குவதும் ஆழ்த்துவதுமான பிறப்பை ஒழிக்குங் குறியை நோக்கத்தைக்) கொண்ட கருத்தை எனக்குத் தந்தருளுவாயாக; (தமது கருத்தில் வைத்து (உன்னைப்) புகழ்ந்த அடியார்களை நிரம்ப வஞ்சமுடையவர்களை ஒதுக்கித் தள்ளுகின்ற (உனது) மெய் அடியிற் சேர்த்துக் கொள்ளும் வீரனே! மிகுந்த நல்ல தினைப்புனத்தில் (தினை மிகுந்த நல்ல புனத்தில்) இருந்த நல்ல குறத்தியை (வள்ளியை) எழுந்தோங்கும் நல்ல் திருப்புய்த்தில் அணைந்தவனே! போரிற் குவிந்து வந்து எதிர்த்த முப்புரத்து வலிய அரக்கர்களைச் சிரித்து எரித்துச் (சாம்பலாக்கிய) அழிவிலாப் பெருமானாம் சிவபிரானது அழகிய குமரேசனே!