பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகுந் திருத்த மேவும் பெருமாளே. (10) 259. திருவடியை ஒத தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் தனதான வினைக்கின மாகுந் தணத்தினர் வேளம் பினுக்கெதி ராகும் விழிமாதர். மிகப்பல மானந் தணிற்புகு தாவெஞ் சமத்திடை போய் வெந் துயர்மூழ்கிக் கனத்தவி சாரம் பிறப்படி தோயுங் கருக்குழி தோறுங் கவிழாதே. கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங் கழற்புகழோதுங் கலைதாராய், புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ் சியைப்புணர் வாகம் புயவேளே: பொருப்பிரு கூறும் படக்கடல் தானும் பொருக்கெழவானும் புகைமூளச்; சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந் திறக்கம ராடுந் திறல்வேலா. tதிருப்புக ழோதுங் கருத்தினர் சேருந் திருத்தணி மேவும் பெருமாளே. (11) "வெஞ் சமம் - வெம்மையாகிய போர். tஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அருணகிரியார் கூறிய இக் கருத்தை பொய்யாகிர்தபடி ஆண்டு தோறும் டிசம்பர் 31ஆம்தேதியில் திருப்புகழ் அடியார்கள் பெருங் கூட்டமாகத் திருத்தணிகையிற் கூடித் திருப்புகழ் ஓதித் தணிகேசனைப் பணிகின்றார்கள்.