பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/631

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந் தன.பேரி, தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந் தளத்துட னடக்குங் கொடுதுரர் சினத்தையு முடற் சங் கரித்தம லைமுற்றுஞ் சிரித்தெரி கொளுத்துங் கதிர்வேலா. திணைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண் 壘 திருத்தணி யிருக்கும் பெருமாளே.(15) "சினத்தவர் முடிக்கும் என்னும் இந்தத் திருப்புகழ் - முருகன் திருப்புகழின் ஆற்றலையும் பெருமையையும் விளக்கும் முதல் இரண்டடி திருப்புகழ் துஷ்ட நிக்ரகம் செய்யும் என்பதையும், பின் இரண்டடி திருப்புகழ் சிஷ்ட பரிபாலனம் செய்யும் என்பதையும், ஈற்று இரண்டடி அங்கனம் செய்ததற்கு உதாரணத்தையும் எடுத்துக் காட்டுகின்றன. ஏழாவது அடியில் துஷ்டர்களாம் அசுரர்களைச் சங்கரித்ததையும், எட்டாம் அடியில் புனித வள்ளியை மணந்ததையும் எடுத்துக் காட்டுகின்றார். சித்தி விரும்புவோர் - இந்தத் திருப்புகழின் உண்மையை உணர்ந்து முருகன் திருப்புகழ் ஓதி வெற்றி பெறுவார்களாக இருமலு ரோகம் - என்னும் 260- ஆம் திருப்புகழ் நோய் தீர்க்கும் "மந்திரத் திருப்புகழ்" என்றால் இந்தத் திருப்புகழ் சித்தி தரும் தந்திரத் திருப்புகழாம்" - இதனை "வீர ஜயத் திருப்புகழ்" என்றும் கூறுவோம். (அருணகிரி நாதர் வரலாறு - பக்கம் 128 பார்க்க) இந்தத் திருப்புகழின் கருத்தை 'சொலற்களிய திருப்புகழை உரைத்தவரை அடுத்த பகை அறுத்தெறிய உறுக்கி எழும் அறத்தை நிலை காணும் என வேல் வகுப்பிலும் எடுத்து உரைத்துள்ளார். (தொடர்ச்சி பக்கம் 159)