பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/632

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 159 தனத்தன தனத்தம் . தகுத்தகு தகுத்தம் தன - என்ற பேரி (முரசு) வாத்தியமுழக்கத்துடனும் தடுட்டுடு டுடுட்டுண்டு என்ற உடுக்கைப் பறையின் முழக்கத்துடனும் வந்த படையுடன் (போர்க்கு வந்த) கொடிய சூரர்களையும் (அசுர வீரர்களையும்), அவர்கள் கோபத்தையும் ஒரு நொடிப்போதில் அழித்து அங்கனம் அழிபட்டுக் கிடந்த tஅவர்தம் (பிண) மலை முழுமையையும் (உனது) சிரிப்பினால் எரி கொளுத்திச் சாம்பலாக்கிய ஒளி வேலனே! தினை விளைந்த மலையில் (வள்ளிமலையில்) வாசஞ் செய்த குறப்பெண் (வள்ளியின்) கொங்கையிற் சுகித்து (இன்பம் பூண்டு) (யாவரும்) மதிக்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே! (நிறைப்புகழ் உரைக்கும் செயல் தாராய்) திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப் பகையை செயித்தருளும் இசைப்பிரிய' என்னும் திருப்புகழும் (173), இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும்' என்னும் திருப்புகழும் (271) ஈண்டு உணர்தற் பாலன. T சங்கரித்து அம் மலை முற்றும் எனப் பிரிக்க. சங்கரிக்கப் பட்ட அசுரர் பிணக் குவியலை எரித்துச் சாம்பராக்கியது. "பன்னிரு விழிகளும் பிறங்கு வெஞ்சுடர் வடவை போலாக்கி, அக்கணத்தில் உற்று நோக்கினன், எரிந்தன களேவரத்தோங்கல்; வெந்து துண்டுகள் பட்டன" "அழலெழ விழித்த லோடும் அடலையின் உருவாய் அழித்த" "அத்தனோர் உங்காரத் தால் வெந்துகளாக" (அடலை - சாம்பல்) - கந்த புராணம் - சூரன்வதை - 148, 149, 256, 260