பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/634

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 161 264 தோல் நீங்காத குடிசை (இருப்பிடம்), அசுத்தத்தை (அழுக்கை) ஏற்றதும், சுகம், துக்கம், ஆசை கொண்டதுமான குடம், மும்மலம், மாயை (இவை) நெருங்கவைத்த காற்று அடங்கும் தாழி (பான்ை), சொல்லும் சொல் சொல்லாக விளங்காத மழலைச் சொல் போன்ற, அறிவுக்குப் பொருந்தாத பல சமய நூல்களைக் கைக்கொண்டு, கதறுகையை (வீண் கூச்சலை) மேற்கொண்ட ஆக்கை (உடம்பு), துன்பத்துக்கு இடமாம் மாமிசத் தொகுதி, ச்தை, ரத்தம் இவற்றால். கட்டப்பட்ட கலப்பு, மிக வெறுக்கத்தக்க (பொருளான) (இந்த சரீரத்தை) விரும்பித் திரிகின்ற் எனக்கு நன்றாக வாக்கு அழியவும் (மவுன நிலை கூடவும்) ஒருநாள் '!!...? (அல்லது) கட்டப்பட்ட கலப்பு ஆன் இந்த உடல் மீது வெறுப்பை விரும்பி (வெறுப்பை மேற்கொண்டு) திரியவும், நன்றாக மவுன நிலை கூடவும் ஒரு நாள் கூடுமா! எலும்பு (அல்லது ருத்ராகூ மாலை), பாம்பு, திருநீறு இவைத்மை உடம்பில் அன்னிந்துள்ள பெரியராம் (சிவபிர்ர்ன்) அருச்சித்துத் தொழுத ஞானிய்ர்ம் (கடவுளாம்). அப்பனே! போருக்குத் தக்க பன்னிரண்டு மலைபோன்ற தோளனே! குவளை மலர் மலர்கின்ற (அல்லது அ ய) தணிகை மலை (வாழ்வே) பார்வதிக்கும், (கங்கை) நதிக்கும் குமரனே! இந்தப் பூமியில் நோக்கம் என்பது இருந்தால் அது உன்னுடைய நடனத்தை நோக்கும் நோக்கு ஒன்றே; அத்தகைய நோக்கு ஒன்றையே கொண்ட தவசீலர்களுக்கு உதவும் இளையவனே! என்றும் இளையோய்! உன்னை ஏத்தாதார்க்கு அரியவனே (ஏத்தாதவர் கிட்டுதற்கு அரியவனே): ஆ: நீங்கிய்வனே)! பாடல்கன்ளத் தமிழ் கொண்டு ( 鷺 பாக்களால்) உன்னை எத்தினவர்க்கு (புகழ்ந்தவருக்கு) எளிய பெருமாளே! (வாக்கழிவதொரு நாளே)