பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 175 திகைப்பித்து (மயக்குவித்து), உயிரைக் கரைத்து, மனத்தில் உள்ள இன்பத்தை ப்போம்படிச் செய்து, மயக்கத்தைத் ன்ற கண் மிட்டலால் (கண் இமைப்பினால்) காமவழியில் உட்படும்படி அலைவேனோ, தரித்து நீறு (திருநீற்றினைத் தரித்து) (மறை மொழிகளைப் பிதற்றுகின்ற பித்தனாகிய (சிவன்)நன்மை பெருக (இன்பத்துடனே)" பெரிய பிரணவப் பொருளை உபதேசிப் பாயாக, சமர்த்தனே! குழந்தையே!" என்று (உன்னைக்) கேட்கும் படியான புகழைப் பெற்றுள்ள முருகனே! - நிபுணனே! போற்றுகின்ற (அடியார்களின்) புத்தியில் இரக்கத்துடன் எழுந்தருளும் பரம்பொருளே! அறிவுக்கு எட்டாத கடவுளே! ஆயிரக்கணக்கான (பல) யோகங்களுள் சிறப்புற்றதான (மவுன) யோக pü கொண்ட தகூதினா மூர்த்தியான குருநாதனே! (தேவர்களை) வெருட்டின சூரனைச் சங்கரித்து, போரிற் கொலைபட்ட இடங்களில் பேய் வகைகளுக்குப் (பிணக் குவியல்களை) இரையாகக் கொடுத்து, (அந்த இரைகிடைத்த காரணத்தால் பசித்) துன்பம் நீங்கின பேய்கள் தித்திகு தித்தென்று விளையாடும்படிச் செய்த வீரனே! போர்க்களத்தில் ரத்தம் வெகு ப்ரளயத்தினில் இரற்றி ஒட (பெரிய பிரளய வெள்ளம் போல) ஒலித்து ஒட, ஒழித்து, வேலாயுதத்தை நுழைவித்து உயிரை உண்ட வீரனே! நிறை வளர்ச்சியோடு வசிக்கின்ற மீன்கள் உள்ளத்தில் மிகுந்த மகிழ்ச்சி பெறத் தமது பிளப்புள்ள வாயில் (காலை, உச்சி, மாலை எனப்படும்) மூன்று வேளைகளிலும் ஒப்பற்ற செங்குவளையின் மவுன உபதேச சம்பு' (திருப்புகழ் 138); " மோன முத்திரையைக் காட்டி யோகுசெய்வாரி லுற்றான்" (கந்தபுரா - மேருப் 12) என வருவன வற்றால் அறியலாகும். Sஇரற்றல் - ஒலித்தல்.