பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/656

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 183 காற்றினுள்ளும், நீரினுள்ளும், மண்ணுள்ளும், (சமய) வாதம் செய்கின்ற எவரிடத்தும் காணக் கிடையாத ஒப்பற்ற ஞான ஒளியினுள்ளும், நான்கு வேதங்களின் உச்சியினுள்ளும், ஊடாடுகின்றதும், யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர் நிலையில் உள்ளதும், துன்பங்கள் கடந்த நிலையில் உள்ளதுமான சிவரூபத்தை முடிவு இல்லாத பேராசையும், குற்றமும் நீங்காத ஒரு பேதையாகிய நான் - அடைதற்குரிய உபாயவழி எதுவோ அந்த (உபதேசச்) சொல்லைச் சொல்லி அருள்வாயாக. (உபாயவழியைச் சொல்லியருளுக) இதழ்கள் நீங்காத தாமரைக் காட்டைத் துகைத்துத் தாவிக் குதித்து, (அங்கே) தனக்குப் பகையாயிருந்த ரேகைகள் உள்ள வரால் மீன் கூட்டங்கள் தோல்வியுற்று பின் வாங்கி ஓடும்படி போர் புரிந்து - பின்பு - (தான் போகும் வழியிலிருந்த) மதகை (நீர் பாயும் மடை) யைத் தாவித் தாண்டி மேலே ஒடி, (அங்குள்ள) உழவர்கள் (வயலில் உழுபவர்கள்) தன்னை வருத்தாதபடி விலகி ஒடி, (வழியிலுள்ள) நீர் மடைகளைத் தாக்கித் தாவி (அல்லது ஒடைகளில் மோதிச் சென்று), பின்னர் (அந்த ஓடைகள் சேரும்) ஆற்றின் வழியே (வழியாகச் சென்று) கடலிற் புகுந்து அங்கே உள்ள பெரிய மீனை விரைந்து ஒடும்படிச் செய்து - வாளை மீனானது தான் முதலில் இருந்த தாமரைக் குளத்தில் வந்து விழும் (தணிகை); மலர் பூக்கும் சுனையில்