பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/657

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 'கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர கருணை மேரு வேதேவர் . பெருமாளே. (24) 273. திருவடி பெற தனணதன தான தனணதன தான தனணதன தான தனதான உடையவர்க ளேவ ரெவர்களென நாடி யுளமகிழ tஆக கவிபாடி உமதுபுகழ் #மேரு கிரியளவு மான தெனவுரமு மான மொழிபேசி, ‘கடவுள் நீல மாறாத தணிகை - தணிகையில் மலைமேல் ரத வீதிக்குத் தெற்குப் பக்கத்தில் உள்ளது இந்திர நீல சுனை. அந்தச் சுனையில் தேவலோகத்து நீலோற்பலக் கொடியை இந்திரன் வைத்து வளர்த்ததாகவும், காலை, உச்சி, மாலை என்னும் மூன்று வேளைகளிலும் நீலோற்பலம் மலர அம்மலர்களால் இந்திரன் தணிகை வேலரை முப்போதும் பூசித்த தாகவும் புராணம் கூறும் ஏழாம் நூற்றாண்டிலிருந்த அப்பர் சுவாமிகள் "கன்மலிந்த கழுநீர்க் குன்றம்" என இத்தலத்தைக் குறிப்பிட்டார். நீலோற்பலம் மல்ர்வதால் நீலகிரி" என்று சீர்பாத வகுப்பிலும், அனவரதம் நீலமலர் முத்தெறி சுனைப் புனலில் அருவி குதிபாய்தரு செருத்தணி எனப் பூத வேதாள வகுப்பிலும், நீள் சுனை தினமும் உற்பலம் மலர் திருத்தணி என ஞானவேழ வகுப்பிலும், இந்திர நீலச் சிலம்பினன்" எனப் புயவகுப்பிலும், சேர்ப் பது மாலய, நீலோற்பலகிரி என்று கந்தரந்தாதியிலும் அருணகிரியார் போற்றியுள்ளார். மூன்று வேளையிலும் இம்மலர் மலரும், இது தவறாது என்று முருக வேளே வள்ளியம்மைக்கு உரைத்ததாகக் கந்த புராணம் கூறும். "வாசவன் வைகலும் சாத்துதற் பொருட்டால் மூன்று சுனைதனில் எமக்கு முன் வைத்தான்" (காவியிச்) " காலைப் போதினில் ஒருமலர்; கதிர் முதிர் உச்சி வேலைப் போதினில் ஒருமலர் விண்ணெலாம் இருள் சூழ் (185ம் பக்கம் பார்க்க)