பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 முருகவேள் திருமுறை (1 திருமுறை இசைத்திடுஞ் சந்த பேதம் ஒலித்திடுந் தண்டை சூழும் இணைப்பதம் புண்ட ரீகம் அருள்வாயே சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன் இளக்ரவுஞ் சந்த னோடு துளக்கெழுந் தண்ட கோளம் அளவாகத் துரத்தியன் றிந்த்ர லோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்பருஞ் சனன்ட வேலை விடுவோனே! செருக்கெழுந் தும்பர் சேனை துளக்கவென் றண்ட மூடு தெழித்திடுஞ் சங்க பாணி மருகோனே! திணைப்புணஞ் சென்று லாவு குறத்தியின் பம்ப ராவு திருப்பரங் குன்ற மேவு பெருமாளே! (15) முதல் திருமுறை முற்றும். 1. உம்பர் சேனை மயங்கச் சங்கநாதஞ் செய்து பாரிஜாத மரத்தைக் கண்ணபிரான் பூமிக்குக் கொண்டுவந்த வரலாற்றைக் குறிக்கும் 889, 1279 பாடல்களைப் பார்க்கவும். (பா - வே) * 'துரத்தியன் றிந்த்ர லோக மளித்திடுஞ் சம்ப்ர தாய க. ர்ப்படுஞ் சண்ட வேலை விடுவோனே'