பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/670

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 197 பால் வேண்டுங் குறிப்பு மொழிக் குரலுடன் அழுதால் யார் (இந்தக் குழந்தையை) எடுப்பதென்று வெறுத்து, அழும்படி (இப்) பூமியில் விட்டு விடுவார்களோ! எனக்கு இந்த (உன்ம்ை) தோன்றலாகாதா (இந்த உண்மை என் சிந்தனையிற் படலாகாதா) வெள்ளமாய்ப் பெருகியெழும் பால் கொதித்தது போல (பாற்கடல் பொங்கி எழுவது போல) எட்டுத்திசைகளிலும் உள்ள இழிந்த மூடர்களான (அசுரர்கள்) (பின்னிட்டு) ஒடும் படி வெட்டி ய்ழித்த சூரிய ஒளி கொண்ட சத்திவேலைக் கையிற் கொண்ட எங்கள் அரசே! கங்கை வெள்ளம் நெருங்கும் சடை யாடவும், பொ ருந்தி யிருக்கும் மான், #ಸಿ ്) கரங்கள் ஆடவும், அழகிய காலின் கழல் செய்யவும் நடனம் புரிந்தவர் அளித்த செல்வமே! பெரிய தினைப்புனத்தின் மீதிருந்தவளும், மை பூசிய ஒளி பொருந்திய கண்களை உடையவளுமாகிய மாது (வள்ளின்ய) அழகிய மார்பில் அணைத்த மயில் வாகனனே அற்புத (மூர்த்தியாம்) கந்தவேளே! மன்மதன் வெற்றி பெறும்படியான (அழகு வாய்ந்த) பூ முடித்த கூந்தலை உடைய ம்ாதர்கள் ஆச்சரிய்ப்படும்படியான் பெரிய் உண்மைத் தவசிகள் வாழும் திருத்தணி மாமலைப் பதித் தம்பிரானே! (உன் திருவருள் எனக்குச் சிந்தியாதோ) 278 காதணியாக அணிந்துள்ள குழைகளைப் பூண்டவர், அழகிய உருவம் வாய்ந்த நிறத்தினர், வில் அம்பு போன்ற கண்களை உடையவர், சர்க்கரை, அமுதுடன் ஊறின சுவை என்னத்தக்க பேச்சினை உடையவர், புட்குரல் ஒலிக்கும் கண்டத்தினர், ஒலி செய்யும் துடி (உடுக்கை) போன்ற (மேகலை அணிந்த) இடையை உடையவர்கள் - நறுமணம் வீசும்.