பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . திருத்தணிகை திருப்புகழ் உரை 205 மலைகள் எட்டையும் வருத்தி, பெரியகடல் திரட்சியை ஒலிசெயக் கலக்கி, பராக்ரமம் வாய்ந்த சூரனுடைய குடலைத் தனது புயத்தில் (மாலையாக அணிந்து, (அவனது) உடலைத் துண்டஞ் செய்து, கோபித் து, (அவனது) ரத்தத்தில் குளித்து எழுந்த வேலாயுதத்தை உடையவனே! (வள்ளி, அல்லது வள்ளி, முருகவேள் இருவர்) பாதச் சுவடுகள் (அடையாளங்கள்) உள்ள செந்தினைக் கொல்லையில் உதிரிப்பூக்களை (மாலையாகக் கட்டி நின்ற வள்ளியம்மை நாணங்கொள்ளும்படி (வெட்கும்படி). (அவளைத் தொழுது ஏத்தி நின்ற போற்றி நின்ற) முத்தனே (பாசங்களில் நீங்கியவனே) அழகிய மதில் சூழ்ந்த திருத்தணிப் பெருமாளே! (சம்பந்தராகத்) தமிழ் வேதமாகிய தேவாரப்பாக்களைப் பாடிய பெருமாளே! (மக்கள் நின் சரணப் ப்ரசித்திசற் றுணராரோ) 281 ஒலித்து அதிரும் இந்தப் பொங்குகின்ற கரிய கடல் ஒன்றாலும் (அல்லது கரிய கடல் ஒன்றினதாலும் என்னை வருத்துவதில் கூடிக் கலந்து வேலை செய்வதாலும்). கோபித்து, மிகச் சிவந்து, நெருப்புத் தன்மையைப் பூண்டு, உதித்தெழுந்துள்ள நிலவாலும். ஒப்பற்ற (தனது) கரும்பு வில்லை ஏந்தி (மன்மதன்) செலுத்தின அம்புகளாலும். வாட்டுதலுற்றுத் தனித்த ஒருத்தியாம் இவள் (தலைவி நாயகி) இளைப்புற்று இங்கு உடல் சோர்வு அடையலாமா!