பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/708

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 235 மூக்கு அறுபட்டவள், பயனற்றவள், மகா பலத்தை உடையவள், (போருக்கே மூல) காரணமா யிருந்தவள், சூர்ப்பநகை என்னும் பேருடையாள் படுமூளி (மிகவும் காது, மூக்கு முதலிய உறுப்புக்கள் குறைந்தவள்), கொடியவள், நெருப்புப் போன்றவள், மூர்க்க குலமான அரக்கர் குலத்தைச் சார்ந்தவள். விபீடணரின் சகோதரி, முழு வஞ்சகி (அல்லது வணக்காளி போன்றவள்) (தனக்கு) மூத்தவனான அரக்கன் இராவணனோடு சீதையின் வரலாறு, அழகு முதலியவற்றை எடுத்துக் கூறி அவனுக்குக் காமத்தை மூட்டிவிட, தாமரைக் கோயிலில் வீற்றிருக்கும் இலக்குமி தேவியாம் சீதையை.(அந்த) மோட்டன் (மூர்க்கன்) சூழ்ச்சியாற் கவர்ந்து ஒரு தேரின்மேல் ஏற்றிக்கொண்டு ஆகாய வழியாகச் சென்று சிறந்த பெருமையும் அழகும் வாய்ந்த கோபுரங்கள் விளங்கும் தனது ராஜதானியாகிய இலங்கை நகரில் (சிறை) இருத்திக் காவல் வைத்த பொழுது, அவன் குலம்) வேர் அறும்படியான வழியை எடுத்து முடித்த வில்லாளிகளின் (விற்போர் வல்ல வீரர்களின்) தலைவனாகிய பூரீ ராமபிரானது (திருமாலின்) மருகனே! வாத்தியங்களாம் மத்தளம், பேரிகை இவைகளின் ஒலிபோல மறை (வேத மொழி) கூறி வாழ்த்தத் திருத்தணி மாமலை மேவிய பெருமாளே! மலருள் கழுநீர் மலரை (செங்கழுநீர் மலரைத்) தருகின்ற நீண்ட சுனை உள்ள திருத்தணி மாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே! (அருள் புரிவாயே) t காரணி - சங்காரகாரி ஹாரணி என்னும் வடமொழி காரணி என நின்றது என்பர் ஆசிரியர் - மு. திருவிளங்கம் அவர்கள்.