பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/711

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 293. ஒதிப் பிழைக்க தனதான தனத்தன தான தனதான தனத்தன தான தனதான தனத்தன தான தனதான நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமான தெனப்பல பேசி யதனுாடே. நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கரவாகி நினைவால்நி னடித்தொழில் பேணி துதியாமல், தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி சலமான பயித்திய மாகி தடுமாறித். தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துணை யோதி தலமீதில் பிழைத்திடவேநி னருள்தாராய், கலியான சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத கவினாரு புயத்திலு லாவி விளையாடிக் களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை கடனாகு மிதுக்கன மாகு முருகோனே; பலகாலு முனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படிமீது துதித்துடன் வாழ அருள்வேளே. பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு பவரோக வயித்திய நாத பெருமாளே (45) "புயத்தில் உலாவுதல் - புயத்தை அணைத்துத் திளைத்தல்"திருமகள் உலாவும் இருபுய முராரி" (திருப்புகழ் 418) "புன மேவிய தனிமானின் தோளுடன் ஆடிய தலைவா" (திருப்புகழ் 677).