பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/713

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 முருகவேள் திருமுறை [5 -ஆம் திருமுறை 294. அறிவு பெற தனத்த தத்ததனத் தனதான நினைத்த தெத்தனையிற் றவறாமல் நிலைத்த புத்திதனைப் பிரியாமற். கனத்த 'தத்துவமுற் றழியாமற். கதித்த நித்தியசித் தருள்வாயே: மனித்தர் பத்தர் தமக் கெளியோனே. மதித்த முத்தமிழிற் பெரியோனே: செனித்த புத்திரரிற் சிறியோனே. திருத்தணிப்பதியிற் பெருமாளே (46) 295. பெரியோரை மதிக்க தனன தானனம் தனண தாண்ணம் தனன தானணம் தனதான பகலி ராவினுங் கருவி யாலனம் பருகி tயாவிகொண் டுடல்பேணிப். பழைய வேதமும் புதிய நூல்களும்

  1. பலபு ராணமுஞ் - சிலவோதி,

--- - தத்துவங்கள் 36 (பாட்டு 157) அசுத்ததத்துவம் 24 சுத்த தத்துவம் 5: சுத்தா சுத்த தத்துவம் 7- ஆக 36 மூலப் பொருள்கள் இவை தமைக் கடந்தால் - பேரின்ப நிலை. " ஆறாறையும் நீத்து அதன் மேல் நிலையைப் பேறா அடியேன் பெறுமா றுளதோ" (கந் அநுபூதி) ஆறாறுக் கப்பால் அரன் இனிதாமே (திருமந்திரம் 2271) tஆவி கொண்டு உடல் பேணி உயிரை வளர்க்க உடலை வளர்க்க வேண்டும். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே (திருமந்திரம் 724) :நூல்கள் சில கற்றோரிடம் மதிப்பு வைக்க வேண்டும் (பாடல் 224).