பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 241 294 நினைத்தது எந்த அளவும் தவறாமல் இருக்கவும் (நினைத்தவை எல்லாம் நினைத்த படியே கை கூடவும்) நிலையான புத்தியை விட்டு நான் பிரியாமலிருக்கவும் (என் புத்தி எப்போதும் ஒருவழிப்பட்டு நிலைத்திருக்கவும்) பெருமை வாய்ந்த உண்மையை (நான்) உணர்ந்து அதன் பயனாக, (அல்லது முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த நிலையை உற்று அதனால்), அழிவிலாது தோன்றக் கூடிய (உண்டாகக் கூடிய) சாசுவதமான அறிவை அளித்தருளுவாயாக. மனிதர்களுக்குள் பக்தர்களுக்கு எளியவனே! மதிக்கப்படும் முத்தமிழ் (அறிவிற்) பெரியவனே! தோன்றிய (சிவ) குமாரர்களுள் சிறியவனே (இளைய. வனே)! திருத்தணிப் பதியிற் பெருமாளே! (நித்திய சித்து அருள்வாயே) 295 பகலிலும் இரவிலும் (உடல் என்னும்) கருவியால் அன்னம் (உணவு) பருகி (உண்டு), ஆவி கொண்டு (உயிரை ஒம்பி) உடலை விரும்பி வளர்த்து பழைய வேத நூல்களையும், புதிய (நல்ல நூல்களையும் பலவகையான புராணங்களையும் ஒருவாறு (சிலவற்றை) ஒதி (உணர்ந்து)