பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 255 301 அழகிய (உனது) பாதங்களைத் துதித்து மேலான பதவியை அடைந்த பக்தர்களுடைய அழகை எடுத்துரைத்து (உள்ளம்) நெகிழ்ந்து உருக அறியாமலும். புத்தகங்களைக் கற்றுப் பிதற்றலை விட்டு, ஞானத்தால் உன்னைத் துதித்திடப் புத்தியில் கலக்கமில்லாத வகையில் (கலக்கம் அற்ற புத்தியுடன்) உன்னை நினையாமலும் முற்பட்டுப் பூமியிற் பிறந்து (பூமியிற் பிறத்தலில் முற்பட்டவனாகி)ப் பின்னர் - (பூமியில்) நான் செய்யும் அகிருத்தியச் செயல்கள் (அக்கிரமம்ான செயல்கள்) நிரம்பி, முன்னும் பின்னும் (எப்போதும்) தவித்து (அல்லது பிறருடைய முன்வாசல்களில் நின்று தவித்து)த் தினந்தோறும் அலைகின் ற எ ன்னை அடியோடு, இந்த இழிவான பிறப்பினுள் (விழுந்து) கிடப்பதினின்றும் நீக்கி, முத்தி (மோட்ச இன்பத்தை) சற்று எனக்கு (நீ) அளித்தருளும் ஒரு (பாக்கிய) நாள் கிடைக்குமா! (இமய மலை (அரசன்) போற்றி வளர்த்த உமா தேவிக்கு இடது பாகத்தை அன்பு பொருந்தி அளித்த (வித்தக அத்தர்) ஞான் முதல்வர்'(சிவபிரான்) ப்ெற்ற வெற்றி மயில் வீரனே! கல்வி, உண்மை இவையிடங் கொண்ட (அல்லது கல்வியின் இயல்பான அமைப்பைப் பெற்றுள்ள) (இயல், இசை, நாடகம் என்னும் மூன்று வகை கொண்ட) Sதமிழ்மொழியின் சொல்லும் பொருளோசையும் நீடித்திருக்கும் (பெருகி இருக்கும்) மெய்ம்மை (விளங்கும்) திருத்தணி மலையில் உறைபவனே! முன் பக்கத் தொடர்ச்சி 'தன்னை நீக்கியே சூழ்வுறுந் தவமுடைப் பிருங்கி உன்னி நாடிய மறைகளின் முடிவினை உணரா என்னை யாளுடை யானிடஞ் சேர்வனென் றிமயக் கன்னி பூசனை செய்தகே தாரமுன் கண்டான்" கந்த புராணம். வழிநடை - 3. (1-233) S இது அருணகிரியார் காலத்தும் திருத்தணியில் தமிழ் பிரபல மாயிருந்தது என்பதைக் காட்டுகின்றது. (பாடல் 254.குறிப்பைப் பார்க்க)