பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 261 புகை தரும் நெருப்பினால் திரிபுரம் எரிபட்டு அழியச் சிரித்தவருடைய இடது பாகத்தில் வீற்றிருப்பவள், வல்ைஞர் (பரதவர்) மகளாகத் தோன்றினவள், மலைகளுள் இமயமலைக் கரசன் பெற்ற இமயவல்லி, அபிராமி,

  1. அம்பலத்தில் அமைந்து திமித்திமி என்று நடனம் செய்யும் தேவி, எழுத்து (இலக்கணங்கள்) அறிந்துள்ள ருத்திரி, பகவதி, கெளரி, ஒழுங்காகப், பொருளின் பயனாகச் சொல்லுக்குப் பொருந்தி இருப்பவள் " (சொல் லும் பொருளும் போலச் சிவத்தொடு கலந்து நிற்பவள்), அமுதுபோலப்

tiபூமியை வயிற்றில் அடக்கிய நெடியோனாம் திருமாலுக்குத் தங்கை, (காஞ்சியில் முப்பத்திரண்டு) #அறங்களை வளர்த்த பரசிவை, சிறப்பமைந்தவள், SSநிலைபெற்ற அல்லது (இயல் இசை நாடகம் என்னும்) மூன்று வகையதான தமிழைத்தந்த பழையவள் (உமை) அருளிய் குழந்தையே!

  1. பொது உற்று பொது அம்பலம். 'பரத்தின் உச்சியில் நடம் நவில் உமை" திருப்புகழ் 267 தேவியும் சிவனும் ஒன்று கூடி ஆடுவர். தற்பரனொ டாடும் அபிராமி சிவகாமி திருப்புகழ் 644 "நடமாடி மடமாதொடு" சம்பந்தர் - III - 81-10.

S கங்கையையும், தேவியையும் வேறுபாடின்றிக் கூறுவர் போலும் அருணகிரியார். வானச் சாணவி" (சேவல் விருத்தம் 6) பகிரதி - திருப் 137; திருப். 496 'சொல்லும் பொருளும் என நடமாடுந் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே" அபிராமி அந்தாதி 28, "மலி பொருளோ ருரையும் நிலவுதல் போல் நிட்களத்தைப் பிரியாது மருவி" - பஞ்சாதிகார விளக்கம். சொற் பொருளும். எனக் கலந்து சிவத்தில் அந்நியம மாகி" தணிகாசல புராணம். ttசெகத்தை வயிற்றில் அடக்கியது - திருப்புகழ் 267 பார்க்க #தேவி அறம் வளர்த்தது - பாட்டு 278 பார்க்க SS தமிழும் தேவியும். தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி சப்பாணி கொட்டி யருளே - மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்.