பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/740

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 267 சக்கராயுதங்களுடன் வந்த (அல்லது தேர்களில் வந்த அல்லது மலை ப்ோல வந்த அசுரர்களின் பெரிய முடிகள் பொடிபடவும், அலைகள் வீசும் கடல் வற்றிப் போகவும், போர்க்களத்தில் மேடான உயர் நிலங்களிலும் புரண்டெழுந்த மிகுதியான ர்த்தம் பெருகி ஆறாக (ஒடும்படி)யும், சிகரங்களை உடைய மலை (கிரெளஞ்சம்) நெரிபட்டு பொடியாய் அழியவும், வேற்படையாற் சண்டை செய்தருளிய (அஞ்ஞான) இருள்ை நீக்கும் (ஞான) சூரியனே! குருபரனே! இளமயிலிற் பொருந்தி வரும் பெருமாளே! ஒப்பற்ற தணிகையில் நிலைத்து விளங்கும் பெருமாளே! (அடியவர் தவமதில் வர அருள் புரிவாயே) 305 முடித்த கூந்தலை உடையவர்கள், (தேன்) வடிகட்டினதென இனிக்கும் பேச்சுக்களை உடையவர்கள், (ஆகிய மாதர்களின்) முகத்தில் விளங்கும் கண்களாலும் கொங்கை மலை மீது அசைகின்ற ஆடையாலும், அவர்களின் மெல்லிய இடையாலும் (நான்) மோகங் கொண்ட வனாகிப் படுத்த படுக்கையில் அனைத்த அம் மாதர்களோடு (இந்தப்) பூமியில் தினந்தோறும் திரிய்ர்தவாறு: பருமையுள்ள மயில்மேல் நினைத்த அந்தப் பொழுதிலேயே உன்னுடைய பாதமலரிணைகளைத் தந்தருளுவாயாக டிதுடித்து, பத்துத் தலை ராவணனுடைய கிரீடம் அணிந்த் த்ல்ைகள் அற்று விழப் பூட்டிய அம்பினைச் செலுத்தின ரகுராமன் (பாதத்தால்) மிதித்து இந்த உலகை ஒரடியாலே அளந்து விளங்கக் காட்டிய அரி ஆகிய திருமாலின் அழகிய மருகனே! (அல்லது திருமாலுக்கும், " க்ே மருகனே!) " செய்யாள் மருக" - கந். அந்தாதி - 69.