பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/742

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகிை திருப்புகழ் உரை 269 குளத்தில் வசிக்கின்ற கயல் மீன்கள் வயல்களிற் காணக் கிடைக்கும்படி தழைத்த வாழை மரங்கள் சாய்கின்ற செழிப்பையும் அழகையும் கொண்ட திருத்தணிகையில் களிப்புடன் வீற்றிருக்கும் சரவணனே! பெருமாளே! (உன் பதத்து மலரிணை அருள்வாயே) 306 (தனக்குள் இருக்கும்) முத்து வெளியே தெறித்து விழும் படியாக முற்றி வளர்ந்துள்ள கரும்பை வில்லாகக் கையிற் கொண்ட மன்மதன் அடியோடு (நன்றாய்ச்) செலுத்தின மலரம்புகளாலும் முத்துக்களைத் தன் அகத்தே கொண்ட அழகிய கடலின் பரப்பிலே உதிக்கின்ற (தோன்றுகின்ற) தீ (நெருப்பு)ப் போன்று (அல்லது உலைத்துருத்தியின் தீப்போல) எதிர்ப்பட்டு வீசும் நிலவொளியாலும் எந்த தத்தையர்க்கும் (எல்லாக் கிளி போன்ற பெண். களுக்கும்) அலர் மொழி பேசுவதால் வரும் இன்பம் பெருகிப் பொருந்துவதைக் கண்டும் (பெண்கள் இவளைப் பற்றி அலர் மொழி பேசி இன்பம் பெறுவதைக் கண்டும்), இந்தப் பொற் கொடி போன்றவள் (நாயகி) தளர்ச்சியுறாத வண்ணம். எந்தத் திக்கில் உள்ளவர்களும் புகழ்கின்ற வெற்றி விளங்கும் திருத்தணியில் இன்றைய தினத்தில் வந்தருள வேண்டும்; மிகுதியாகக் கோபித்து வடதிசையில் இருந்த சிறந்த சிகரங்களைக் கொண்டிருந்த மலையை (கிரெளஞ்ச மலையை)த் தொளை செய்த ஒளி வேலனே!