பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/744

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 271 மெச்சிப் புகழ்ந்து குறத்தி (வள்ளியின்) கொங்கை மீது ஆசைப்பட்டு அவளை அணைந்து, உருகி, மிகவும் பெருமையை அடைந்த அழகிய மார்பனே! வெறி மிகுந்த பித்தரான (பெரிய பித்தரான) பரமர், ஊமத்தம் பூ அணிந்த சடைப் பரமர் தமது உள்ளத்தில் வைத்துப் போற்றின திருவடிகளை உடையவனே! (முருகவேள் தமக்கு உபதேச ,ီ## ஆதலின் அவரது திருவடிகளைத் தமது உள்ளத்திற் சிவபிரான் த்ரித்தனர் என்க) வட்ட வடிவுள்ள அலை வீசுங் கடலில் (அசுரர்களை) முறித்து அழித்து, எதிர்த்து நின்றவரை வெட்டித் துண்டாக்கிய பெருமாளே! (திருத்தணியில் இற்றைத் தினத்தில் வரவேணும்) 307 கொங்கை புளகங் கொள்ள, அழகிய கையில் உள்ள சரி (வளை வகை), வளையல் இவை மெல்ல ஒலிக்க, மேகம் போன்ற கூந்தல் அகில் மணம் வீச அமுதம் போன்ற மொழிகள் நடுக்கமும் விரைவுங் காட்ட அருமை வாய்ந்த கண்கள் குவிய, நிலவு போன்ற முகத்தில் வெயர்வு எழ், நறுமணமுள்ள படுக்கையில். ஆடை தளர, செழுமை வாய்ந்த கொடி போன்ற இடை துவட்சி உற (நெளிய), உடல் ஒன்றோடொன்று சேர, உருகி, உள்ளம் அன்பு மிக்கு கலவி (புணர்ச்சித் தொழில்) கரை (அளவு) கடந்து இன்ப அலையில் அலைபடுகின்ற கவலை ஒழிய உன்னுடைய அன்பைப் பெறுவேனோ! அலை வீசும் அழகிய வலிமை வாய்ந்த கடலின் உட்புறத்தில் நெருப்பு நெருங்கி மிக அதிர்ச்சியுடன் வெடிபட அண்டம், (அண்டம் அதிர்ந்து வெடிபட)த் தேவர்கள் அபயம் என்று முறையிட, இடை நிலத்தே நின்ற அசுரர்கள் அழிய அடிபட்டு, அவர்க ய (போர் முனையும். அல்லது துணிவும்) கெட்டு அழிய நின்று சண்டை செய்த வேலனே!