பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/745

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை தலைமதிய நதிதும்பை யிளவறுகு கமழ்கொன்றை சடைமுடியி லணிகின்ற பெருமானார். தருகுமர விட'வை ந்து தலையரவு தொழுகின்ற தனிமலையி லுறைகின்ற பெருமாளே. (59) 308. பரம ஒளியிற் கூட தனதனன தனதனண தத்தத்த தத்ததன தனதனன தனதனண தத்தத்த தத்ததன. தனதனன தனதனண தத்தத்த தத்ததன தனதான மொகுமொகென நறைகொண்மலர் வற்கத்தி லற்புடைய முளரிமயி லனையவர்கள் நெய்த்துக்க றுத்துமழை முகிலனைய குழல்சரிய வொக்கக்க னத்துவள ரதிபார முலைபுளக மெழவளைகள் சத்திக்க முத்தமணி முறுவலிள நிலவுதர மெத்தத்த வித்தசில மொழிபதற விடைதுவள வட்டச்சி லைப்புருவ இணைகோட அகில்மிருக மதசலிலம் விட்டுப் பணித்தமல ரமளிபட வொளிவிரவு ரத்நப்ர பைக்குழையொ டமர்பொருத நெடியவிழி செக்கச்சி வக்கமர மதநீதி. தணிகையில் வாசுகியும், ஆதிசேடனும் பூசித்ததாகத் தணிகைத் தல புராணங்கள் கூறுகின்றன: திருப்பாற்கடல் கடைந்த போது மத்தாக இருந்த மந்தர மலையில் இருந்த பிளப்பினில் கயிறாக இருந்த ஆதிசேடன் சிக்கக் கடைந்த வேகத்தில், ஆதிசேடனுடைய தோல் சுரசுரப்பை அடைந்தது. திருமல் உரைத்த உபதேசப்படி, டன் திருத்தணிகையை அடைந்து தவம்புரிய, முருகவேள் எதிர்தோன்றி ஆதிசேடனுடைய உடம்பைத் தமது கரத்தினால் தட்வ சேடன் சருச்சரை (செர்ர சொரப்பு) நீங்கிப் பழைய வலிய தேகத்தைப் பெற்றான். (இது தணிகாசல புராணம்) இங்ங்ணம் இடர் உற்றுப் பூசித்துப் பேறு பெற்றது வாசுகி என்னும் நாகம் என்று தணிகைப் புராணம் கூறுகின்றது. (அடுத்த பக்கம் பார்க்க)