பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/750

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று திருத்தணிகிை திருப்புகழ் உரை 277 வெட்கம் (அவமானம்) உறுகின்ற என்னுடைய உடலில் உதித்த (பிறந்த) நல்ல குணம் ப்ொருந்திய ஒரு கொடி போன்ற பஞ்சு போல மெலிந்த மயிலனைய (என் மகள்), தனது உள்ளத்திற் சேர்ந்த (காமத்)தியால் இறந்துபடும் தனிமை நிலையை (முருகா) நீ நினைத்து அருளுதலாகாதா! தென்னை மரங்களின் கூட்டத்துடன் எங்கும் வாழைகள் அமைந்து பொருந்திய சோலைக்கு உள்ளே. தெந்தெந் தென தென என்னும் ஒலியுடன் நெருக்கம் உற்று வண்டுகள் நின்றும் (நின்று பாடவும்), விளக்கத்துடனே மயில்கள் ஆடவும். (நீர்) நிறைந்த சுனைகளில் எங்கும் குவளைகள் எக்காலத்தும் புகழ் பெறும்படி மலர்களைத் தருகின்ற மிக அழகிய தணிகையில் வீற்றிருந்தருளி, ஏழு உலகங்களையும் என்றும் படைத்தளிக்கவல்ல பெருமாளே! (பொன்றுந் தனிமையை நினையாயோ) 310 வரி (உயர்ச்சி - அல்லது நீளம்; கோடு) கொண்டுள்ள மானுக்கு ஒப்பான கண் கடையால் (கடைக் கண்ணால்) ஞரை மயக்கும் (பொது) மாதர்களின் மீதுள்ள மோகத் தாலே - (எனது) அறிவு குழப்பம் அடைந்து, உள்ள காசும் (பொருளும்) அம்மாதர்களுக்கே கொடுத்து (அதனால்) வறுமையடைந்து, வயிற்றில் நெருப்பு மிகவும் மூண்டு எழ அது காரணத்தால் ஒருத்தருடன் நட்பு பூண்டும், ஒருத்தருடன் பகைமை பூண்டும், த்தரை மிகவும் விரும்பித் தேடியும் (இப்படிப் பட்டவர்களிடத்தே ஊடாடி) உண்ண வேண்டிக் கையை நீட்டுகின்ற பெரும் பாவியாகிய எனக்கு உன்னுடைய ருவடியைப் பாடும்படியான சிறந்த குண துாய்மையைத் தந்தருளுக.