பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/751

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை விரித்தருண கிரிநாத னுரைத்ததமிழெனுமாலை மிகுத்தபல முட்னோத மகிழ்வோனே. வெடித்தமணர் கழுவேற ஒருத்திகணவனுமீள விளைத்ததொரு தமிழ்பாடு புலவோனே: செருக்கியிடு பொருஆரர் குலத்தையடி யறமோது திருக்கையினில் வடிவேலை யுடையோனே. திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான திருத்தணிகை மலைமேவு பெருமாளே. t (62) 311. திருவடியைப் பெற தானத்தன தானன தந்தன தானத்தன தானன தந்தன தானத்தன தானன தந்தன தனதான வாருற்றெழு பூண்முலை வஞ்சியர் காருற்றெழு நீள்குழல் மஞ்சியர் வாலக்குயில் போல்மொழி கொஞ்சியர் தெரு மீதே. மானுற்றெதிர் மோகன விஞ்சையர் சேலுற்றெழு நேர்விழி விஞ்சியர் வாகக்குழை யாம#ப் ரஞ்சியர் மயலாலே; சீருற்றெழு ஞானமு டன்கல்வி நேரற்றவர் மால்கொடு மங்கியெ சேருற்றறி வானத ழிந்துயி ரிழவாமுன். "ஒருத்தி கணவன் - மங்கையர்க்கரசியா ருடைய கணவனாகிய கூன் பாண்டியன். ஈண்டுக் கூறிய (சம்பந்த மூர்த்தியின்) திருவிளையாடலைப் பாட்டு 103 பாட்டு 181-கீழ்க் குறிப்பிற் பார்க்க t இச்செய்யுள் அருணகிரிநாதருடைய திருவாக்கென்பதைப் பற்றிச் சிறிது ஐய மிருப்பினும், பழைய பிரதிகள் பலவற்றினுங் காணப்பட்ட படியால் விடாது சேர்க்கப்பட்டது.

  1. அபரஞ்சியர் - புடமிட்ட பொன் போன்றவர் - பசும் பொன் அணையார்; வஞ்சியே அபரஞ்சியே மடமயிலே வரிக்குயிலே, கொஞ்சியே

பழி அஞ்சி யார் உனைக் கூடுவாரினி அம்மே.". - மீனாட்சியம்மை குறம் 5.