பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/752

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 279 விரிவாக அருணகிரி : பாடியுள்ள (திருப்புகழ் என்னும்) தமிழ் மாலையை மிகுந்த பலமுடன் ஒத ழ்பவனே! பொறாமையாலும் அவமானத்தாலும் துடித்துச் சமணர்கள் கழுவி லேறவும், ஒப்பற்ற கேயர்ஃ. கணவன் (கூன் பாண்டியன் என்னும் நெடுமாறன்) திரு நீறிடும் வழிக்கு மீண்டு வரவும் (சமண்ச் சார்பினின்றும் நீங்கி உய்யவும்), வழி செய்த ஒப்பற்ற தமிழ்ப் பாடல்களைப் பாடின புலவனே! ஆணவத்துடன் போர் செய்த சூரர்களின் (ஆசுரர்களின்) குலத்ன்த அடியோடு அற்றுப்போக மோதித் தாக்கின திருக்கை வடிவேலை உடையவனே! அழகு விளங்கும் ஒப்பற்ற நீலோற்பலமலர்ச் சுனையைக் கொண்டதாய் அழகு அமைந்த திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெரும்ாளே! (உயர்ச்சி பெறு குண சிலம் அருள்வாயே) 3.11 இரவிக்கை பொருந்தி எ ன்ற, ஆபரணம் அணிந்த கொங்கையை உடைய வஞ்சிக் கொடி போல்பவர்கள், மேகத்தின் கருநிறத்தை ஒத்து எழுகின்ற நீண்ட கூந்தலின் அழகுடையோர்கள், இளங்குயில் போல (இனிமை உள்ள) ம்ொழி பேசிக் கொஞ்ச்பவர்கள் - தெருவிலே மாட்சிமையுடன் (விளக்கத்துடன்) எதிர்ப்படுகின்ற காம மயக்கம் உண்டாக்க வல்ல மாய் வித்தை வல்லவர்கள், சேல் மீனுக்கு நிகராய் எழுகின்ற கண்கள் மேம்பட்டு விள்ங்குபவர்கள், அழகுள்ள குழை அணிந்துள்ள புடமிட்ட பொன் போன்றவர்கள் - ஆகிய பொது மாதர் மீதுள்ள மோக மயக்கால் சீரான ஞானமும் கல்வியும் ஒழுக்கமும் அற்று அப் பொது மாதர்கள் மேலுள்ள மோகத்தர்ல் நர்ன் ஒளி மழுங்கி நிறம்குன்றி என்க்குள்ள அறிவும் அழிந்து உயிரை இழப்பதன் முனபதாக