பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 முருகவேள் திருமுறை 12- திருமுறை 19. அகப்பொருள் (நற்றாய் இரங்கல்) அம்பொத் தவிழித் தந்தக் கலகத் தஞ்சிக் கமலக் 'கணையாலே அன்றிற் குமணற் றென்றற் குமிளைத் தந்திப் பொழுதிற் பிறையாலே எம்பொற் கொடிசீமற் றுன்பக் கலனற் றின்பக் கலவித் துயரானாள் என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக் கின்பப் புலியுற் றிடலாமோ? கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக் கொங்கைக் குறவிக் கினியோனே கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக் கொஞ்சித் தமிழைப் பகர்வோனே செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச் சிந்தக் கறுவிப் பொரும்வேலர் செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச் செந்திற் குமரப் பெருமாளே! (4) 1. தாமரைப் பூ - காமன் ஐங் கணைகளுள் ஒன்று. ஐங்கணைகள் . தாமரைப் பூ மாம் பூ அசோகம் பூ முல்லைப் பூ நீலோற்பலப் பூ ஐங்கணைகளின் செயல் : தாமரை - நினைப்பு ஊட்டும்; மாம் பூ - பசலை நிறம் தரும்; அசோகு - உணர்வை நீக்கும், முல்லை - கிடை காட்டும் (படுக்கச் செய்யும்); நீலம் (நீலோற்பலம்) - கொல்லும் நினைக்கும் அரவிந்தம் நீள்பசலை மாம்பூ அனைத்துணர்வு நீக்கும் அசோகு - வனத்திலுறு முல்லை கிடைகாட்டும் மாதே - முழுநீலம் கொல்லுமதன் அம்பின் குணம் - இரத்தினச் சுருக்கம். 2. மன் துன்ப கலன் அற்று தரித்திருக்கின்ற துன்பத்தைச் செய்யும் ஆபரணங்களை அறவிடுத்து, 3. புலி - புல்லி, (பா - வே) * இந்தப் பழிவைத் திடலாமோ