பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/797

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை பேறை நகர் (இது பெரும் பேறு. செங்கற்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கத்திற்கடுத்த "தொழுப்பேடு" புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ள ஊர். சிறிய மலை. கோயில் மலை மேல் உளது)

  • 327 - 1. மாதர் மயக்கு அற தானதன தான தந்த, தானதன தான தந்த

தானதன தான தந்த தனதான நீலமயில் சேரு மந்தி மாலை நிக ராகி யந்த காரமிக வேதி றைந்த குழலாலும். நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர னேர்தருமு கார விந்த மதனாலும், ஆலிணிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள் ஆசைவலை வீசு கெண்டை விழியாலும் ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாலு மந்த னாகிமயல் நானுழன்று திரிவேனோ, 'கோலவுரு வாயெழுந்து பாரதனை யேயி டந்து கூவிடுt முராரி விண்டு #திருமார்பன். கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெழுந்த கோபவரி நார சிங்கன் மருகோனே, இந்தப் பாடல் எங்கள் பதிப் பில் பாடல் எண் 726 ஆக உள்ளது. கோயில் மலை மேல் இருப்பதால் குன்றுதோறாடலில் இங்கே சேர்க்கப்பட்டுப் பதிப்பிக்கப்பெற்றது. திருமால் பன்றி உருவாகிச் சென்று பூமியை மீட்டு வந்த வரலாறு பாடல் 229 கீழ்க் குறிப்பைக் காண்க t முராரி -- கண்ணபிரான் (திருமால்), பாட்டு 231

  1. திருமார்பன் - திருமாலின் மார்பில் இலக்குமி வாசம்:

"பங்கயத்திருந்த பொன்னை ஆகத்தில் ஒருவன் வைத்தான்" - கம்ப. ராமா மாரிசன் வதை - 76.