பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/798

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - பேறைநகர்) திருப்புகழ் உரை 325 பேறை நகர் 327 - 1 நீலமயில் (சேர்ந்து விளையாடும்) மாலைப் பொழுதுக்கு ಣ್ಣ? ஒப்பதாகி, (அந்தகாரம்) பேரிருள் மிக்கு றைந்துள்ள கூந்தலாலும் நீடித்துள்ள (அதிரேகம்) மிக்க இன்பம் தருவதாகிய சல்லாபம் (இன்பமாய்ப் பேசத்தக்க) சந்திரனுக்கு ஒப்பான முகத் தாமரையாலும். ஆலிலைக்கு ஒப்பான வயிறாலும், பெண்கள் தங்கள் ஆசை வலையை வீசுகின்ற கெண்டை மீன் போன்ற கண்களாலும். கடைந்தெடுத்த குடம் போன்ற ரவிக்கை அணிந்த கொங்கையாலும் - .w് ங்கினவனாகி - காம மயக்கத்தில் நான் கலங்கித் திரிவேன்ோ. கோலம் (பன்றியின்) உருவோடு சென்று, பூமியைத் தோண்டிச் சென்று, கூ (பூமியை) விடு (மீட்டு வந்த) (அல்லது கூவிடு - இரைந்து வந்த) முராரி (முரன் என்னும் அசுரனுக்குப் பகைவனான) விண்டு (திருமால்), இலக்குமியை மார்பில் வைத்தவன். (மாளிகையின்)"கூடத்தில் இருந்த பெரிய செம்பொன் னாலாய உயர்ந்த ಟ್ಜಾ துண்டத்தே தோன்றி எழுந்த, கோபம் நிறைந்த நரசிங்க மூர்த்தியின் மருகனே! i- HTTā அசுரன் இரணிய கசிபின் குமாரன் பிரகலாதன் இரண்யாய நம " என்று ஆசிரியர் சொல்லிக் கொடுத்தும் " நாராயணாய நம" என்றே பிடிவாதமாகக் கூற, இரணியன் அவனைப் பலவாறு தண்டித்தும் அவன் அரி நாமத்தையே சொல்ல, அசுரன் கோபித்து உன் தேவன் எங்கு உள்ளான், இந்தத் துரணில் இருக்கின்றானோ எனக் கூடத்துப் பொன் துணைக் காட்ட பிரகலாதன் ஆம், அங்கும் உளன்' என்று விடை அளிக்க அசுரன் அந்தத் தூணை அறையத் தூணில் இருந்து வெளிப்பட்டார் நர சிங்க மூர்த்தி அம்மூர்த்தி இரணியனைத் தன் தொடை மேலிருத்தி நகத்தாற் கிழித்து அவன் ரத்தத்தைக் குடித்து, அவனுடைய குடல் மாலையை அணிந்தனர். கையா லெற்றினான் எற்ற லோடும் திசைதிறந் தண்டங் கிறிச் சிரித்தது செங்கட் சியம்" - கம்ப. ராமா இரணியன் வதை 127