பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 65 21 புள்ளிகளை உடையதும், உயர்ந்துள்ளதும், அழகுள்ளது மானமலை (போன்ற வெள்ளை யானை) யின் மீதும் மேகத்தின் மீதும் தங்கி விளங்குபவனும் (இந்திரனும்), இணையில்லாத பெருமையுள்ள வேதத் தொகுதிகளின் பொருளை முறையுடன் சொல்லுபவனும் (பிரமனும்), மலைபோலப் பெருமைவாய்ந்த பாம்பின்மீது துங்குகின்ற அந்தச் சக்கரம் (ஏந்திய) திருக்கையை உடைய திருமாலும், (ஆக, இம் மூவரும் நமக்கு அந்த உபதேசப் பொருள் கிடைக்க இல்லையே என மனங் கலங்கிச்) சுழல, (என் உள்ளம்) பொங்கி (மகிழ்ந்து), அலைதல் அற்று. (நீ) சொல்லும் உபதேச (மொ ழியை) உட்கொண்டு, உள்ளம் தெளிவு பெறுதற்கு (அந்த ஒப்பற்றதான தனிப் பொருளாம்) ஒன்றை(எனக்கு)உபதேசித்தருள வேண்டும்; தகர வித்தை என்கின்ற வேதசிரோ முடியாகிய ப்ரும்ம ஸ்தானத்திற் பொருந்தி நல்ல இருதயகமலம் என்னும் இடத்தில் உறைவோனே! இளங்கொங்கை கொண்ட குறத்திக்கு இன்பத்தை அளித்து (அவளிடம்) அன்பு உற்று அருள்வோனே! ஒளிகொண்ட பைம்பொற் சிகரங்களை உடைய மலையைக் (கிரெளஞ்ச மலையை) இப் பூமியிற் சிதறி மடியச் செலுத்திய வேலாயுதனே! பவளம்போற் சிவந்த தூய மதில் (சூழும்) திருச்செந்துார்ப் பதியிற் கந்தப் பெருமாளே! (உள் தெளிதற்கு ஒன்றைத் தரவேணும்.) 1. வெள்ளை யானை, மேகம் - இவை இந்திரன் வாகனங்கள் 2 செங் கட்செவி, செம்மை - பெருமை கட்செவி - பாம்பு 3. தகரம் . இருதயத்தின் உள்ளிடம் தகர வித்தை இறைவனைத் தகராகாசத்தில் வைத்துத் தியானம் செய்யும் முறையை உணர்த்தும் வித்தை