உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/810

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . சிராப்பள்ளி திருப்புகழ் உரை 337 331 மாதர்களின் மீது உள்ளம் உருகி, சேர வேண்டும் என்னும் இச்சை தருகின்ற பிரிவு என்னும், காம நோயால் மிகவும் வசம் அழிதல் ஏற்பட்டு, காம தாகம் அதிகரித்து, நெருங்கிய கொங்கை மேலே வீழ்ந்து - (அதன் மேலுள்ள) அகில், சந்தனம் இவை தம் கலவிச் சேற்றில் முழுகியும், எழுந்தும், எதிரே கூப்பிய கையடியில் உள்ள நகம் பிறை ப்ோலப் படும்படி விளையாடி நறுமணம் மிக்க பூ நிறைந்த கூந்தல் சரிய, இடையில் இருந்த உடை (புடைவ்ை) விலக, சில புட்களின் குரல் ஒலிகள் எழ, மீன் போலும் கண் சோர்வடைய குளிர்ந்திருந்த முகத்தில் சிறு வெயர்வு எழ, வாயிதழ் அமுதை உண்டு, பகலும், இரவாகும்படி (இரவும் பகலும் ஒன்று போலக் கழித்து)க், (கலவிக்) கூத்தாடும்படி (இந்தத்) துார்த்தனை (காமுகனா கிய) கொடியவனைக் கைவிடலாமா! (335 பக்கத் தொடர்ச்சி) மைந்தா, குமரா என்பன போன்ற இறைவன் திருநாமங்களே பிறவித் துன்பத்தை ஒழிக்கவல்லன. மருந்தவை மந்திரம் மறுமை நன்னெறியவை மற்றும் எல்லாம் அருந்துயர் கெடும் அவர் நாமமே சிந்தை செய் நன்னெஞ்சமே, சோதி நாமமே ஓதி உய்ம்மினே" என்றார் சம்பந்தர் (1.96.3; III.92-1), இக் காரணத்தால்தான் மனத்தை விளித்து இறைவன் நாமத்தை ஒதுக, ம்ைந்தா குமரா என்னும் ஆர்ப்பு உ(ய்)ய மறவாதே என்கின்றார் அருணகிரியார். இங்ங்ணம் ம்னத்தை (நெஞ்சத்தை) விளித்துக் கூறுவதின் காரணம் - ஒருவழிப்பட்டு நின்று இறைவன் நாமத்தை ஓதிப் பிறவித்துயரை நீக்க, நெஞ்சம் அல்லது வேறு துணை யில்லாமையே. "துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி" என்றார் திருவள்ளுவர் (திருக்குறள் 1299) இங்ங்ணம் மனத்தை விளித்து நல்லறிவு சொல்லும் பிறிதொரு பாடல் " பாட்டில் உருகிலை" எனவரும் 399 ஆம் பாட்டு.