உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/824

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - சிராப்பள்ளி திருப்புகழ் உரை 351 336 குமுத மலர் போன்ற வாயினின்றும் பழம் போலவும் அமுதம் போலவும் இனிமைதரும் பேச்சினர், அம்பு, வேல் சேல் மீன் போன்ற அழகான குழைகள் தாக்குகின்ற கண்களினால் (கண்களைக் கண்டு) (நான்) மகிழ்ச்சி மிக்குப், பெருமையுடன், முடிவு இல்லாத மோகத்துடன், அப் பொதுமகளிரோடே. உம்முடைய தோள்களின் மீது எமக்கு உள்ள ஆசையை நீர் அறிய மாட்டீர், எம்மைப் பார்க்க மாட்டீர், எம்மிடம் வரமாட்டீர், எம்மொடு சேர மாட்டீர் என்றெல்லாம் கூறி நின்று. (அவர்களுடைய) ஆடையைத் தொட்டு, அவர் தம் பணத்திலும் (பாம்பின் படம் போன்ற அல்குல் இடத்தும், இடை தாங்கமுடியாத (கனத்த) கொங்கைகளின் இடத்தும்) விழுகின்ற நான் ஈடேறும் வழியைக் காணாமலே திரிவேனோ! ஒலி செயும் (துதிச்) சொற்களுடனே தேவர்கள் (ஒதி) வாழ்த்துகின்ற தாதாவே (பெரியோனே! கொடையாளனே): சிறந்த ஞானவானே (ஞானியே) மயில் வாகனனே! மலைப் ப்ரதேசங்களுக்குத் தலைவனே! வயலூர் நாட்டுக்குத் தலைவனே! இறத்தல், மூத்தல் இலாத நீ, வா, இளையோனே! இருள் போற் கரிய அரக்கர்களுடன் போர் செய்த வேல் ஏந்திய திருக்கரத்தனே! திரனே! வீரனே! நேர்மை (நீதி) யுள்ளவனே! தோல்வி யிலாத உமையின் குழந்தையே! திரிசிராப்பள்ளி மலையின்மேல் விளங்கும் தேவே! அரசே! வேளே! தேவர் பெருமாளே! (ஈடேறாதே உழல்வேனோ)