பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/840

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - சிராப்பள்ளி திருப்புகழ் உரை 367 343 நூல்களை வாசித்து அதனாற் காணலாம் என்றால் அங்ங்னம் காணுதற்குக் கிட்டாதது; பூசை செய்து அதனால் கூடலாம் என்றால் அங்ங்ணம் கூடுதற்குக் கிட்டாதது; வாய்விட்டுப் பேசி விவரிக்கலாம் என்றால் அத்தகைய பேச்சுக்கு அகப்படாதது! நெஞ்சில் LIMIT or (அழுக்கு) உடைய மாக்களுக்குப் புலப்படாதது அன்புடைய அடியாரைவிட்டு நீ ங்காதது; மாயைதன்னைச் சூழ்வதற்கு இடம் தராதது; (யோக மார்க்கப் பயிற்சியில் கோ என முழங்கும் சங்கத் தொனியாகிய) விந்து சம்பந்தநாத mu ஒசைக்குத் துாரமானது; ஆகாயத்துக்கும் அப்பாற்பட்டது; உலகத்துக்கு முதற்பொருளாயுள்ளது - (எதுவோ அதைக்) கண்டு அடியேன். (சிவ)யோகத்தைச் சேரும்படிக்கு மெய்ஞ்ஞானத்தை உபதேசித்தருளுக இனியும் நான் ஊன் அதை இவ்வுடலை வெறுத்துவிடாது மயங்கலாமோ (அல்லது - குற்றங்களைத் தொலைத்து நீங்காமல் மயங்குதல் நன்றா)! ஆசைப்பட்டுத் தினைப்புனத்தைக் காவல் செய்த வேடிச்சி (வள்ளிக்காக) மிக்க காமம் கொண்டு அவளுடைய அழகிய பாதத்தைப் பணிந்த கந்தவேளே! ஒலிசெய்து களித்துச் சேல்மீன்கள் பாய்கின்ற வயலூரதில் (வயலூரில்) பாம்பை நெருக்கித் தாக்கி அதை ஆரம் (மாலை போலக் காலிற்) பூணுகின்ற மயில் எனும் குதிரை வீரனே! o