பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 69 23 தாமரைப் பிராட்டியும் (கலைமகளும்), இலக்குமியும் (இவர்களுக்கு ஒப்பு என்று) சொல்ல ஒண்ணாத (அழகு வாய்ந்த) மாதர்களின் சந்தனக் கலவை (அணிந்த) குளிர்ந்த கொங்கையினும், அங்கையிலும், இரண்டு மலர் (தாமரை) போன்ற - களவு நூல்களைக் கற்றறிந்த வஞ்சங்கொண்ட, மை (பூசின) கண்களிலும், காம மயக்கத்தையும் (நறு) மணச் சுகத்தையும் தரும் கறுத்த கூந்தலிலும், திங்கள் (நிலவு) போன்ற முகத்திலும் மயக்கங் கொள்ளாமல் - மாசு இல்லாத (தூய) சிந்தையை அடைந்து, பரந்துள்ளதும் அழிவு இல்லாததுமான அறம், பொருள் இன்ப (நூல்கள்) முழுமையும் ஒதி, உணர்ந்து, அடங்கிய பின்னர், (உனது) திருவருள் உண்மையையே - (நான்) அறியவும், பெறவும், அன்புடனே இனியத் ஒலியை தரும் சிலம்பு ஒலிக்கின் (D, செம்பொன்னாலாய கிண்கிணி அணிந்துள்ள (உனது) திருவடியைத் தந்தருளுக; குமரி, காளி, பயங்கரி, சங்கரி, கவுரி, நீலி, பரம்பரை, - அம்பிகை, குடிலை, யோகினி, சண்டினி, குண்டலி, எமது ஆயி (தாயி) - குறைவில்லாதவள், உமை, மந்தரி, அந்தரி, வெகு விதமான ஆகம சுந்தரி (எனப்படும் பார்வதி தேவி)தந்தருளிய குமரனே! பெருச்சாளி வாகனத்தைச் செலுத்தும் (அல்லது பெருச்சாளி வாகத்தைக் கொண்டவனும்) (உனக்கு) முன்னவனுமான ஐந்து கரங்களையுடைய கணராஜனும் (கணபதியும்), எனது விநாயக (மூர்த்தியும்), நஞ்சைக் கக்குகின்ற பாம்பை (அரையில்) அணிந்துள்ள யானைமுக வடிவினனும் (ஒளியினை உடையவனும்), ஒப்பற்ற பிறையை முடியிலணிந்துள்ளவனுமான (கணபதி) சிந்தை மகிழ்ந்தருளும் இளையோனே!