பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 71 வளர்கின்ற வாழையும் மஞ்சளும் இஞ்சியும் எப்போதும் நெருங்கி (விளங்கும்) மங்கலமும் மகிமையும் கொண்டுள்ள சிறந்த நகரமாம் திருச்செந்துாரில் வந்து உறைகின்ற பெருமாளே! (கிண் கிணி தங்கிய அடிதாராய்) 24 பூமியையே விலைமதிக்கும்படியான தோடு விளங்கும் மிக ழகிய காதை நெருங்கிவரும் அம்பு போன்ற கண்ணால் | لئے (மனம்) புண்பட்டு, மாதர்களின் கொங்கைக்கு இடையே சென்று - அணைகின்ற பழைய ஆட்டங்களை (காமலீலைகளை)க் கற்று உருகிய பெருங்களிப்பைப் பெற்றுப் (பின்னர்) அழிவைத் தரும் திண்டாட்டம் கொஞ்சம் ஒழியக் கூடாதோ (கொஞ்ச மேனும் ஒழியாது எனலுமாம்.) பிறப்பு ஒழியவேண்டி நெஞ்சாற் சிந்தனைசெய்து, விளங்குகின்ற கடப்பமலர் நிறைந்த தண்டை சூழ்ந்துள்ள, (உனது) அடியிரண்டையும் போற்றுகின்ற திடவீரமும், நாள்தோறும் - (உனது திருவருளை நாடிப்) பதறுகின்ற (அருள் கிட்டாதா என்று வாய்திறக்கும்) ஆசைப்பாடும், பக்தியும் அறிவும் இல்லாது போய், அச்சமுறும் துயரில் (நான்) படுதலை (நீ) கண்பா ர்த்து அன்புற்று அருளமாட்டாயா? தவநெறி குறையாத குணத்தினராம் துறவிகள் கூடத் தோற்று அஞ்சும்படி (தனது ஒப்பற்ற) மலர்ப்பாணங்கள் ஐந்தின் நிறைந்த குவியல் கொண்டு போர் செய்து -