பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/888

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . விராலிமலை திருப்புகழ் உரை 415 கலவை நறுமணம் மிகுந்தவையுமான கொங்கைகள் நெகிழ்ந்து அசையும்படி கூடி, காம மயக்கில் மயங்கி, அன்பு காட்டும் (கொவ்வைக்) கனிபோன்ற வாயிதழ் (அமுதை) உண்டு, துவட்சியுற்று (சோர்வு) உற்று, பஞ்சு மெத்தையின் மேல் வீழ்ந்து வாயூறு நீரைப் பருகிப் பொருந்திய கரிய மீன்போலுங் கண்கள் ஒன்றுபட்டுச் சிவந்து குவியுமாறு, இன்பத்தைத் தரும் கொப்பூழ் என்கின்ற குளத்திற் பொருந்த முழுகி இனிமை தரும் ஒரு இன்பம் உண்டாக அதை அனுபவித்து, பொய் நிறைந்த (பொது மகளிரின் மாட்டு பொது மகளிர் பால்) ஈடுபடும் எனது இளம்பருவம் முதுமைப் பருவத்தை அடைவதன் முன்னர் உனது திருவடியைப் பெறும் வழியை உணர்வேனோ (உணரும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ!) பரதநாட்டியத்துக்கு அணிந்துகொள்ளும் சிலம் ஒலிக்கின்ற அழகிய அடிகளை உடையவனே! பெே (அல்லது வரிக்ளை உடைய) முகத்தை உட்ைய சாம்புவான் முதலான கரடிப்படையும், குரங்குப் படையும் பணி புரிய (ஏவல் செய்ய) - (போர்க்குச்) சென்று முயற்சி கொண்டு மலை வரிசைகளின் இடையே போய் - (வெளி வேடக்காரனான) மோசக்காரனான ராவணன ஆl இலங்கை கலங்கும்படி அவனுடைய பொன்னாலாய கிரீடங்களை அணிந்த தலைகள் பத்தும் துணிபட்டு, ஏழுலகும் நடுங்க, விழுகின்ற பனம்பழம்போல விழும்படி ஆக்கினவரும். ~. 'மருத மரங்களை ஒடிந்து விழ வைத்தவருமான முகுந்தன் (திருமால்) அன்புவைத்துள்ள மருகனே! குவிந்து மலர்கின்ற தாம்ரைகள் உள்ள வயலூரிலும், மணம் வீசும் சண்பகம் (மலரும்) பெருமை வாய்ந்த விராலி

  • மருதம் உதைந்த வரலாறு - பாட்டு 143, பார்க்க.