பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/896

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . விராலிமலை திருப்புகழ் உரை 423 361 கொடை என்பதே அறியாதவனைப்புகழ்ந்து, அவனைக் குபேரன்தான் என்று கூறி, அவனை ழ்ந்து துதித்து, வீணாகத்திரிந்து, இந்தப் பூமியின்மீது எடுக்க முடியாத பாரங்களை எல்லாம் சுமந்து (தாங்க முடியாத கவலைப்பாரங்களைத் தாங்கி), எண்ணுதற்கும் முடியாத கலிபுருடனது (கொடும்ையால்) நான் மெலிந்து (வாடி), அதனால் உண்டான எனது சகல துன்பங்களும் தொலைய அன்று (முன்னாளிலேயே) உனது திருவருளைப் போற்றி விரும்பாது காலங்கழித்தேன்! சுடாத்தனம் (பசும்பொன்) அனைய கொங்கைகளால் உள்ளம் மயக்கம் பூண்டு சுகாதாரமான (சுகத்தைத் தரக்கூடிய) வழியில் நெறியுடன் நடக்காமல். கெடுதலில்லாத தவநெறியும் மறைந்துபோக, துக்கமே மிகப்பெருகி, ஆற்றல் இல்லாத (வலிமையற்ற) உடலில் ஆவி நொந்து நான் இறந்துபடு 燃醬 - யமன் என் உயிரைப் பிரிப்பதற்குமுன் நீதியை புரிந்து அவன் முன்புதோன்றி, " தொடாதே (இவனை) ஏ யமனே நீ" என்ற சொல்லானது உனது நாவில் வருமோ! சொல்லியருளுக! ஏழுலகங்களையும் பெற்ற தேவி (உமை) அருள் பாலனே! நட்டு வைக்கப்படாத சுழி (சுழிமுனை தசநாடியுள் இடைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது), மூலம் (மூலாதாரம் முதலிய ஆறாதாரங்கள்), விந்து (சத்திப்ேதம்) கிய இவைகளின் நள் (மத்தியில் உள்ள) ஆவியில் தோன்றி వే: ான நம்பனே (ஞான மூர்த்திய்ே) சூரியனுக்குச் ΔΗΡΙΟΙΓΜΠΓ@Τ யை உடைய பரிச்த்தமான் கூரிய வேல்னே! (வெயில் படாத) குளிர்ந்த சோலைகள் வானத்தை அளாவி உயர்ந்து வளர்ந்து பச்சென்ற நிறத்துடன் தழைத்து, நாள் தோறும், - விடாமல் மழை பெய்வதால், பல (நீர்ப்பூக்கள்) தடாகங் களில் நிரம்பி மலரும் விராலிமலை மேல் விள்ங்கும் கந்தனே! அல்லது விராலிமலையை உகந்த (விரும்பும்) பெருமாளே! (தொடாய் மறலியே நீ யென்ற சொல் உன் நா வருங்கொல்)