பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/898

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . விராலிமலை திருப்புகழ் உரை - 425 362 மாயையே உரு எடுத்தாற் போன்ற முழுச்சமர்த்திகள், முடிவே இலாத தந்திரம் நிறைந்த மனத்தொடு பசப்புபவர்கள் (இன்முகங் காட்டி ஏய்க்கின்றவர்கள்), வாழ்நாளை அறுத்தழிக்கும் கடைக் கண்ணினர் (கடை விழியினர்), முநிவர்களும். காம மயக்கத்தால் வாடும்படி சிரித்து அவர்களை உருக்க வல்லவர்கள், மேலே இட்ட ஆடையின்மீது கொங்கையைத் திறந்து காட்டுப்பவர்கள் (கொங்கை வெளிபெறக் காட்டுபவர்) வாருங்கள், இருங்கள், என்றெல்லாம் கூறும் முழு மோசக் காரிகள் மிக்க மோகத்தையும், ஆய்வதற்கு இடமில்லா வகையில் ஆசையையும் எழுப்பு கின்ற வஞ்சனை வாய்ந்தவர்கள், காசு கொடுக்காத போது மிகவும் ஊடுபவர்கள் (மாறுபட்டு நிற்பவர்கள்), கள் உண்டு (மதம்) மகிழ்ச்சி கொள்ளும் மனத்தினர்கள், பழி, பாவம், ஆகுமோ என்று எண்ணாத திருட்டு வீணிகள் (பயனற்றவர்கள்), வேடிக்கையான நகக்குறிகள் உள்ள கழுத்தை உடையவர்கள், ஆசாரக் குறைவுள்ளவர்கள், விலைக்குக் கொங்கையை அளிப்பவர்கள் - (ஆகிய) பொது மகளிரின் உறவு நல்லதா (உறவு கூடாது என்றபடி) காய்ச்சாத பால், நெய், தயிர்க்குடங்களைப் பொருந்திய மனத்துடன், சற்றேனும் யோசியாமல், எடுத்து இடைச்சி களுக்குத் தெரியாதபடி குடித்துக் கொண்டிருக்கும்போது, உரலுடன் (அவரது) மேகம்போன்ற திருமேனியைக் கட்டி, ஒரு போரிடுவது போல அசோதை என்பவர்பிடித்து அடிக்க, அப்போது இரண்டு காதுகளையும் கைகளாற் பிடித்துக் கொண்டு அழுதவரும், இனிமையாக ஊதும், புல்லாங்குழல் கொண்டு அனேக விதமான பசுக் கூட்டங்களை (ஒன்றும்) தவறாதபடி (தளராத வண்ணம் அழைத்து வரும் அச்சுதனாம் (திருமாலைச்) சிறப்பு வாய்ந்த) மாமனாகக் கொண்டருளும் வயலூரனே!