பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 முருகவேள் திருமுறை 12 - திருமுறை கினிமையி லொன்றாய்ச் சென்றுட் படுமன முன்றாட் கன்புற் றியலிசை கொண்டேத் தென்றுட் டருவாயே நெடிதுத வங்கூர்க் குஞ்சற் புருடரும் நைந்தேக் கம்பெற் றயர்வுற நின்றார்த் தங்கட் கனையேவும். நிகரில்ம தன்தேர்க் குன்றற் றெரியில்வி ழுந்தேர்ப் பொன்றச் சிறிதுநி னைந்தாட் டங்கற் றிடுவார்முன்; திடமுறு அன்பாற் சிந்தைக் 'கறிவிட முஞ்சேர்த் தும்பர்க் கிடர்களை யும்போர்ச் செங்கைத் திறல்வேலா. தினவரி வண்டார்த் தின்புற் றிசைகொடு வந்தேத் திஞ்சித் திருவளர் செந்தூர்க் கந்தப் பெருமாளே.(10) 26. பாதுகைதீட்சை பெற அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு துவட்பஞ் சாணத டாகம்வி டாமட அனத்தின் துாவிகு லாவிய சீறடி மடமானார் அருக்கன் போலொளி வீசிய மாமர கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம் அழுத்தும் பாவியை யாவி யிடேறிட நெறிபாரா;

  • அறிவிடம் - தெளிவு. o t கார்முகம் - பஞ்சு கொட்டும் வில்.