பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/906

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - விநாயகமலை திருப்புகழ் உரை 433 366 சரவண மடுவில் (நாணற் காட்டு மடுவில்) தோன்றியவனே உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; கருணை மேம்பட்டவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்கு கின்றேன்; (நூற்றிதழ்த்) தாமரை போன்ற திருவடிகளை உடையவனே உன்னை வணங்குகின்றேன்; அழகிய- (அல்லது அழகனே). இளமை விளங்கும் கதிர் ஒளியை உடையவனே! (அல்லது இளமை கொண்டுள்ள திரனே) உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; ஒப்பிலா வீரனே (நிர் - உபம வீரா! அல்லது நிருப அரசனே! அமர் வீரா போர் வீரனே), உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; போர்க்கள ஊரா (திருப்போரூரா) உன்னை வணங்குகின்றேன், வணங்கு கின்றேன். உலகத்துக்கு ஈசனே! பரம்பொருட் சொரூபனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன், தேவர்களுக்குத் தலைவனாம் இந்திரனுக்கும் அரசனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; நறுமணம் வீசும் கடப்ப மலர் அணிந்தவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; உமை, காளி, பகவதி எனப்படும் பார்வதியின் குமரனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; இம்மைக்கும் மறுமைக்கும் மூலகாரணனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; ஆண்மை நிறைந்த பரிசுத்தனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன் - அருள் புரிவாயாக. சூரியனும், ஆகாசமும், பூமியும் கலக்கும்படி தூசியேறி நிறைய தேவர்கள் யாவரும் ஈடேற, எழுகடலும் சூர்மாவைப் பிளக்க வந்த வேலின் வெப்பத்தைத் தாங்க முடியாமல்) முறையோ என்று -