பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/935

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 376. பொது மகளிர் மீதுள்ள மயக்கம் அற தந்தத் தனத்தந் தாத்தன, தந்தத் தனத்தந் தாத்தன தந்தத் தனத்தந் தாத்தன தனதான மந்தக் கடைக்கண் காட்டுவர் கந்தக் குழற்பின் காட்டுவர் மஞ்சட் பிணிப்பொன் காட்டுவ ரதுராக. வஞ்சத் திரக்கங் காட்டுவர் நெஞ்சிற் பொருத்தங் காட்டுவர் வண்பற் றிருப்புங் காட்டுவர் தனபாரச்: சந்தப் பொருப்புங் காட்டுவர் உந்திச் சுழிப்புங் காட்டுவர் சங்கக் கழுத்துங் காட்டுவர் விரகாலே. சண்டைப் பிணக்குங் காட்டுவர் பண்டிட் டொடுக்கங் காட் தங்கட் கிரக்கங் காட்டுவ தொழிவேனோ, பந்தித் தெருக்கந் தோட்டினை யி ந்துச் சடைக்கண் சூட்டுமை பங்கிற் றகப்பன் தாட்டொழு குருநாதாt பைம்பொற் பதக்கம் பூட்டிய அன்பற் கெதிர்க்குங் கூட்டலர் பங்கப் படச்சென் றோட்டிய வயலூரா; தகப்பனாருடைய தாளைத்தொழுகின்ற குருநாதனே, தகப்பன் உனது தாளைத் தொழ நின்ற குருநாதனே என இருவகையும் பொருள்பட நிற்கின்ற அழகு போற்றத் தக்கது. - வள்ளி பதம் பணியும் ... தயாபரனே' எனக் கந்தரநுபூதியில் (6) வருவது போல. t பதக்கம் பூட்டிய அன்பன் - இன்னாரென்று விளங்கவில்லை. அன்பன் பொருட்டு பகைவரை ஒட்டிய வயலூரா - என்றதனால் ஒரு வேளை இது "நல்லியக் கோடன்" என்னும் சங்க கால அரசனைக் குறிக்கலாம். (அடுத்த பக்கம் பார்க்க)